கன்னி மாடம்

ஆசிரியர்: சாண்டில்யன்

Category சரித்திரநாவல்கள்
FormatHard bound
Pages 616
Weight500 grams
₹400.00 $17.25    You Save ₹20
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆறில்லா ஊருக்கு அழகுபாழ்' என்பது முதுமொழி. அது நீராற்றுக்குப் பொருந்தும்; வரலாற்றுக்கும் அமையும்.
வரலாறு எவ்வளவுக்கெவ்வளவு நீளமாகவும் ஆழமாகவும் வளத்துடனும் ஓடுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது பாயும் நாட்டிலே கலை வளரும், பண்பு செழிக்கும், அறிவு ஓங்கும். உறுதி.
எது சரித்திரம்? பல்கலைக்கழகக் கோட்டையிலே, பேராசிரியர்களின் மூளைக்குள்ளே அணிவகுத்து நிற்கும் ஆயிரமாயிரம் விவரங்கள் சரித்திரமா? அல்ல. நூல் நிலையத்திலே, கனத்த அட்டைகளுக்கு நடுவே, பொடி எழுத்துக்களில் திணிக்கப் பட்டிருக்கும் தேதிகளும், பெயர்களும், போர்க்களங்களும் சரித்திரமா? அல்ல.
ன் எது சரித்திரம்? மக்கள் அறிந்ததே சரித்திரம்; அவர்கள் ரத்தத்தோடு ரத்தமாகக் கலந்துவிட்ட நினைவுகளே, சரித்திரம். 'நாம் நீர்க்குமிழிகள் அல்ல. வடியாத பெரு வெள்ளத்தின் துளிகள் நாம். அற்ப வாழ்வுடைய தனிமனிதர் அல்லர்; அழிவற்றதோர் பரம்பரையின் உறுப்பினர் நாம். நேற்று இருந்தோம், இன்று இருக்கிறோம்; நாளைக்கும் இருப்போம்!' என்று தோள்தட்டத் தூண்டுவதே சரித்திரம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாண்டில்யன் :

சரித்திரநாவல்கள் :

வானதி பதிப்பகம் :