கனவுத் தொழிற்சாலை

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 288
Weight300 grams
₹210.00 ₹189.00    You Save ₹21
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தக் கதை முழுக்க முழுக்கப் பட உலகையே பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கிறது. இந்தக் கதையின் முதல் அத்தி யாயத்தை நடிகை லட்சுமியிடமும், ரைடக்டர் மகேந்திரனிடமும் கொடுத்துப் படிக்கச் சொன்ன பிறகு சுஜாதாவுடன் அவர்கள் விவாதித்தனர். அவர்களோ கதையைப் பற்றியும் அல்லாமல் பொதுவாக சினிமா உலகைப் பற்றியும் இங்கே சுவையாக அலசியிருக்கிறார்கள். நடிகை லட்சுமி: உங்க கதையின் முதல் அத்தியாயத்தைப் படிச்சேன்... ஆரம்பத்திலேயே 'நன்றாகத் தெரிந்தவர்கள், தெரிந்தவர்கள், குறைவாகத் தெரிந்தவர்கள் இவர்களைப்பற்றி இல்லே இந்தக் கதை'ன்னு ஒரு 'எக்ஸ்கியூஸ்' கேட்டிருக்கீங்களே, அதுக்கு என்ன அர்த்தம்...?
சுஜாதா: தெரிஞ்சவங்களைப் பத்தி எழுதறது ரொம்ப சுலபம். படிக்கறவங்களும் நான் யாரை வச்சி எழுதறேங்கறதைக் கண்டுபிடிச்சுடுவாங்க... என்னுடைய 'பர்பஸ்'அதில்லே... நான் ஒரு Eternal ஹீரோவைப் பத்திச் சொல்ல விரும்பறேன். உங் களுக்கே சினிமாவைப் பத்தி எவ்வளவோ தெரியும். உங்களோடு பேசும்போது அதைப் புரிஞ்சுண்டு அதையெல்லாம் என் நாவல்லே கொண்டு வர்றதுதான் என் எண்ணம். முதல் அத்தியாயத்திலேயே ஒரு இடத்திலே நான் எழுதியிருக்கேன். லட்சுமி (இடைமறித்து): சீன் நெ. 67-ன்னு வருதே... சுஜாதா: ஆமாம்... என் கதாநாயகனுக்கு அந்த சீன் எவ்வளவு அபத்தமாயிருக்குன்னு தெரியுது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :