கதை முடியவில்லை

ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்

Category கவிதைகள்
Publication பூம்புகார் பதிப்பகம்
Formatpaper back
Pages 126
First EditionDec 2011
Weight250 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 2 cms
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கதை முடியவில்லை என்னும் இக்கவிதைத் தொகுதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் தனித்துவமான ஒரு படிநிலையை அல்லது வளர்ச்சியை ஆவணப்படுத்தும் உறுதிநிலையைக் காட்டவல்ல கவிதைகளைக் கொண்டிருக்கிறது.
இன்றுள்ள கவிதைகளை எல்லாம் தம் ஆய்வு ஆளுமைத் திறத்தால் பரிசீலித்துப் பார்த்த ஈழத்துப் பேரறிஞர் கா.சிவத்தம்பி இன்றுள்ள சமநிலைக் கவிஞர்களுள் முதல்நிலைக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்று முடிவுரைத் துள்ளார். மார்க்சிய, தமிழிய ஆய்வறிஞர் கோவை ஞானி மகாகவிக்குரிய நிலையை எட்டிவிட்டவர் ஈரோடு தமிழன்பன் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
வெவ்வேறு விதமான வகைமைகள், உத்திகள் என்று ஒவ்வொரு நூலிலும் தன்னையும் தமிழ்க் கவிதையையும் உயர்த்திக்கொண்டே வந்துள்ள இக்கவிஞரின் இத்தொகுப்பில் ஜென், தாவோ தழுவிய தத்துவச் சாரம் படிந்துள்ள கவிதைகளை வாசகர்களும், ஆய்வாளர்களும் காண முடியும். அகவய நுட்பநிலை உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருக்கும் கவிதைகள் சில ஏமாற்றும் எளிமைத்தனத்தோடு இத் தொகுப்பில் முகம் காட்டுகின்றன.
புதுக்கவிதை மரபு இதுவரை பெற்றிராச் சில பரிமாணங்களைத் தமிழன்பன் ஒவ்வொரு தொகுப்பிலும் வளர்ந்து வந்து இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார் என்றே நாங்கள் நம்புகிறோம்.
ஈரோடு தமிழன்பனின் கவிதைகளை ஐந்து பெரிய தொகுதிகளாக வெளியிட்டுள்ள எமது பூம்புகார்ப் பதிப்பகம், இந்தப் புதிய நூலை அச்சில் வார்த்துத் தமிழ் மக்களுக்கு அளப்பரிய மகிழ்ச்சியோடு வழங்குகிறது. இவருடைய வணக்கம் வள்ளுவ என்ற சாகித்திய அகாதமி விருது பெற்ற நூலை வெளியிட்டோம் என்கிற பெருமையோடு, இன்னும் பல பெருமைகளை எங்களுக்குச் சேர்ப்பார்; தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் புகழ் மகிழ்ச்சி பொங்கச் செய்வார் என்கிற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எங்களுக்கு நிரம்ப நிரம்ப உண்டு.
- பூம்புகார் பதிப்பகம்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஈரோடு தமிழன்பன் :

கவிதைகள் :

பூம்புகார் பதிப்பகம் :