கதை மலர் பகுதி - 8
₹35.00
கதை மலர் பகுதி - 26
₹110.00 ₹104.50 (5% OFF)

கதை மலர் பகுதி 10

ஆசிரியர்: பதிப்பக குழு

Category சிறுவர் நூல்கள்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaper Back
Pages 32
ISBN978-81-7120-753-7
Weight100 grams
₹35.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வசந்தி ஓர் அழகான சிறுமி. அவளை அதே கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்று வசந்தியின் அம்மா ராதாபாய் ஆசைப்பட்டாள். காரணம், வசந்தியும் மகேந்திரனும் அப்படி அன்போடு பழகினார்கள். வசந்தியின் அப்பா ராகவையாவிடம் ராதாபாய் தன் விருப்பத்தைச் சொன்னாள். யார், அந்த அநாதை மகேந்திரனுக்கா? அந்த எண்ணத்தை மறந்துவிடு. வசந்தியை நம் ஊர்ச் சுகவீரனுக்குத்தான் கொடுக்க வேண்டும். அவன் கொழுத்த பணக்காரன். வசந்தி செல்வத்தோடு சுகமாக வாழ்வாள்! ஆனால் சுகவீரர் வயதான மனிதராயிற்றே? என்ன பணம். இருந்தாலும், மனதில் சந்தோஷம் இல்லாமல் சுகமாக வாழ முடியுமா? வசந்தி தோழிகளோடு மாந்தோப்பில் விளையாடிக் கொண்டிருந்தாள். மகேந்திரன் அப்போது அங்கே வந்தான். வசந்தி உன்னிடம் சொல்லிக்கொண்டு போகவே வந்தேன். பிழைப்பைத் தேடிக் கோயில்கள் நிறைந்த நகரத்துக்குப் போகிறேன். அது பெரிய க்ஷேத்திரம்.அங்கே போனால் நல்ல சம்பாத்தியம் கிடைக்கும். இதைக் கேட்டு ஏன் கண்கலங்குகிறாய்? வருமானம் கிடைக்கிறது என்று அங்கேயே தங்கிவிடாதே. இங்கே நான் உன்னையே நினைத்துக் கொண்டிருப்பேன்! சில நாட்கள் சென்றபின் சுகவீரர் சில நண்பர்களோடு அந்த க்ஷேத்திர நகரத்துக்குப் புறப்பட்டார். ராகவையாவையும் தம்முடன் வருமாறு அழைத்துச் சென்றார். நகரத்தில் திருவிழாச் சமயம். கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். நகரில் கோயிலை கட்டிய தர்மசாலையில் அவர்கள் தங்கினார்கள். அன்று இரவே ராகவையாவுக்குக் கடுமையான அம்மைநோய் கண்டுவிட்டது. அவர்களுடன் வந்திருந்த தரகர் இதைப் பார்த்தார். சுகவீரரே! ராகவையாவுக்கு இது அம்மைஜுரம். என்ன செய்வது? அம்மை ஜுரமா? அது மற்றவர்களுக்கும் வந்துவிடும். அவரை பேரு குடிசையில் கொண்டுபோய் விட்டுவிடுங்கள்! நம்மோடு அவர் இருக்கக்கூடாது!உங்கள் கருத்துக்களை பகிர :
பதிப்பக குழு :

சிறுவர் நூல்கள் :

ராமகிருஷ்ண மடம் :