கதை மலர் பகுதி - 9

ஆசிரியர்: பதிப்பக குழு

Category சிறுவர் நூல்கள்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaper back
Pages 32
ISBN978-81-7120-657-3
Weight100 grams
₹30.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பண்டரிபுரத்தில் காமா செட்டி என்பவர் தையற்கடை வைத்து நடத்தி வந்தார். அவர் பண்டரிநாதனாகிய விட்டவரிடம் மாறாத பக்தி பூண்டவர். அவர் தினமும் விட்டலர் ஆலயத்துக்குச் சென்று தம் மனைவி கோனே தயாரித்த உணவை நிவேதனம் செய்துவிட்டு வருவார். அதன்பிறகே அவர்கள் உணவருந்துவார்கள். அவர்களுக்கு ஒரே மகன் மகன் நாமதேவன். பாண்டுரங்கா! இந்த ஏழை படைக்கும் உணவைக் கிருபைகூர்ந்து ஏற்றருள்வாயாக! ஒரு சமயம் தாமா செட்டி வெளியூர் போக வேண்டியிருந்தது. அப்போது அவர், பாண்டுரங்கனுக்கு அமுது படைப்பது தடைப்படக் கூடாது என்று நினைத்தார். அடே நாமதேவா! எனக்குப் பதிலாக நான் ஊரிலிருந்து திரும்பும் வரையில் நீதான் பகவான் விட்டலருக்கு அமுது படைத்து வரவேண்டும். தவறாமல் செய்வாயா? ஆகட்டும் அப்பா நீங்கள் கவலைப்படாமல் போய் வாருங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் ! தாமா செட்டி ஊருக்குப் போய்விட்டார். கோனே தன் மகன் நாமதேவனிடம் அமுது தயாரித்து அனுப்பினாள். குழந்தே, நாமதேவ்! இந்த உணவை விட்டலான் சந்நிதிக்குக் கொண்டு போ! உன் அப்பா செய்கிற மாதிரி விட்டலருக்கு இதை நைவேத்தியம் செய்துவிட்டு வா! தவறினால் அப்பாவுக்குக் கோபம் வரும்.
அப்படியே செய்கிறேன் அம்மா. நீ கவலையேபடாதே.


உங்கள் கருத்துக்களை பகிர :
பதிப்பக குழு :

சிறுவர் நூல்கள் :

ராமகிருஷ்ண மடம் :