கதா சரித் சாகரம் கதைத் தேடல்

ஆசிரியர்: சோமதேவர்

Category கதைகள்
Publication தமிழினி
FormatPaper Pack
Pages 184
First EditionJan 1959
2nd EditionJan 2019
ISBN978-81-87642-09-2
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹170.00 $7.5    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்தியாவில் பைசாசி மொழியில் தோன்றிய குணாட்டியரின் பிருகத் கதையே மிகப்பழமை வாய்ந்த கதைத் தொகைநூல், மறைந்துவிட்ட இதிலிருந்து தோன்றியதுதான் சோமதேவர் எழுதிய பெருங்கதை நூலாகிய கதா-சரித்-சாகர் கதைகளான ஆறுகள் எல்லாம் விழும் கடல், உதயணன் மகன் நரவாகனதத்தனைக் கதைத்தலைவனாகக் கொண்டு, அவனைச் சுற்றிக் கதைகள் கோக்கப்பட்டுள்ளன. டாக்டர் வே.ராகவன் என்ற சமஸ்கிருதப் பேரறிஞர் அக்கதைக்கடலில் இருந்து முத்துக்களாகச் சில கதைகளைத் தேர்ந்தெடுத்து இந்நூலில் அளித்துள்ளார், கதைக்கடலில் காணப்படும் கதைகளுக்கும் சுவை வகைகளுக்கும் எடுத்துக்காட்டாக இக்கதைகள் பொறுக்கப்பட்டிருக்கின்றன, இந்நூலில் தரப்பட்டிருப்பதிலிருந்து முதல்நூலின் போக்கும் பொருட் செறிவும் படிப்போர் எல்லோருக்கும் ஓரளவு தெரியவரும்.

எட்டாம் நூற்றாண்டில் அரபி மொழியில் தொகுக்கப்பட்ட 'அல்ஃப் லைலா' என்ற பெருங்கதைத்தொகுப்பு, பெர்சிய-இந்திய மூலங் களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. ஆயிரத்தொரு அராபிய இரவுக் கதை என்ற பாரசீகத்துக் கதைத் தொகுதியை அன்டோனி கால்லன்ட் (1704-17) பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வழி ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தினார். கிழக்கத்திய பண்பாட்டுக் களம் அப்போதிலிருந்து மேற்கத்திய இலக்கியக் களத்தில் விளக்கம் கொண்டது. பென்பஃபே, தமது பஞ்சதந்திரக் கதை ஜெர்மன் மொழிபெயர்ப்பு முன்னுரையில் மேற்குக் கதையுலகுக்கு கிழக்கு அளித்த கொடையை நிறுவினார். பின்பு இந்தியக் கதை மூலங்கள் எகிப்திய மூலங்களுக்கும் பாரசீக அராபிய மூலங்களுக்கும் தந்துள்ள தாக்கங்கள் தெரியவரலாயிற்று.

டாக்டர் வேங்கடராமன் ராகவன் (1908-1979) தமிழகத்துக்குக் கிடைத்த ஒரு அபூர்வமான சமஸ்கிருதப் பேரறிஞர் என்பதில் சிறிதும் ஐயமில்லை . இசை ஆய்வாளராகவும் விளங்கியவர் அவர். 120 நூல்களும் 1200 கட்டுரைகளும் எழுதியவராக அவர் அறிய வருகிறார். பெரும்பாலும் ஆங்கிலத்திலும் ஓரளவு சமஸ்கிருதத்திலும் அவர் எழுதியிருந்தாலும் தமிழில் எழுதியவையும் சமஸ்கிருதத்தி லிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவையும் கணிசமானவையாகும். இன்று அவரது பல ஆங்கில நூல்கள் மட்டும் மறுபதிப்பாக்கப்படும் நிலையும் அவரது தமிழ்ப்பணி மறக்கப்பட்டிருப்பதும் வருத்தத்துக்கு உரியது. உலகின் சிறந்த பதிப்பகங்களும் இந்தியப் பதிப்பகங்களும் தமிழ்நாட்டில் குப்புஸ்வாமி அய்யர் ஆய்வு நிறுவனமும் டாக்டர் வே.ராகவன் நிகழ்கலை மையமும் அவரது நூல்களைக் பதிப்பித்து வருகின்றன. அவரது மகள் நந்தினி ரமணி என்ற கலைவிமர்சகர்.சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத் துறையின் தலைவராக (1955-68) விளங்கிய அவர், இந்தியாவின் மிகச்சிறந்த சமஸ்கிருதப் பேராசிரியர் என்பதால், உலகளவில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு மிகுந்த ஆதரவைத் தந்து வரும் இந்திய அரசின் சர்வதேச, இந்திய சமஸ்கிருதக் கருத்தரங்குகளின் தலைவராகவும் ஆய்வுநிறுவனங்களின் ஆலோசகராகவும் திட்டவரைவாளராகவும் கெளரவிக்கப்பெற்றிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கதைகள் :

தமிழினி :