கண் கொள்ளாக் காட்சிகள்

ஆசிரியர்: அமரர் கல்கி

Category கட்டுரைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 264
Weight350 grams
₹260.00 ₹221.00    You Save ₹39
(15% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பிள்ளைகளின் பொது அறிவு வளர்ச்சிக்காகச் செய்திருக்கும் ஏற்பாடுகள் நம்மைத் திகைக்கச் செய்கின்றன. மாணவர் இல்லம், பாடசாலை, தொழிற்சாலை ஆகியவற்றின் விரிந்து பரந்த சுவர்கள் எல்லாம் பிள்ளைகளுக்குப் பொது அறிவைப் புகட்ட உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. சிறுவர்களுக்கு, ஏன், பெரியவர்களுக்குக்கூட, தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான பொது அறிவுச் செய்திகளையெல்லாம் அந்தச் சுவர்களில் எழுதியிருப்பதைக் கொண்டே தெரிந்துகொள்ளலாம். சுவர்களில் எழுதி அவை என்றும் மறந்து போகாவண்ணம் பிள்ளைகளின் மனத் திரையில் பதிந்துவிடுகின்றன. உலக சரித்திரம், பாரத நாட்டின் சரித்திரம், தமிழகத்தின் சரித்திரம் ஆகியவற்றை முக்கியமான காலப் பகுதிகளாகப் பிரித்து எழுதியிருக்கிறார்கள். அம்மாதிரியே பூகோள சாஸ்திரத்தின் முக்கியமான விவரங்களை யெல்லாம் படங்களுடனே சுவர்களில் தீட்டி யிருக்கிறார்கள். உலகத்து மலைச் சிகரங்களில் உயர்ந்தவை எவை? உலகத்தி லுள்ள பெரிய அணைக்கட்டுகள் எவை? பல்வேறு தேச மக்களின் சராசரி வயது என்ன? பல்வேறு விலங்குகள், பறவைகளின் சராசரி வயது என்ன? உணவு வகைகளில் சுண்ணாம்புச் சத்து உள்ளவை எவை - இரும்புச் சத்து உள்ளவை எவை? உயிர்ச் சத்துக்களாகிய விட்டமின் ஏ.பி.சி. ஆகியவை எந்தெந்தக் கறி காய் கனி வர்க்கங்களில் எவ்வளவு இருக்கின்றன?...

உங்கள் கருத்துக்களை பகிர :
அமரர் கல்கி :

கட்டுரைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :