கண்ணே கலைமானே

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
FormatPaperback
Pages 416
Weight300 grams
₹185.00 ₹175.75    You Save ₹9
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதிருமூலரின் மனோவேகம் வினாடிக்கு 1000 கி.மீ. வேகமுடையது. எனவேதான் ஆண்டுக்கொரு கவிதை எழுதினார் என்ற வரலாற்று இலக்கிய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
அது உண்மைதான் என்பது பாலகுமாரனின் வளர்ச்சி பலப்படுத்துகின்றது. இல்லை என்றால் இவரது மனோவேகத்துக்கு இவரது வலது கை ஈடுகொடுக்காது என்பதை இவரது ரசிகர்கள் ஒப்புக் கொள்வார்கள்.
நினைத்த வேகத்தில் அவற்றின் வேகத்தோடு தமிழில் இலக்கியத்தில் படைப்புச் சாதனை புரிந்தவர்கள் சிலரே. அவர்கள் கவிஞர் கண்ணதாசனும், தி. ஜானகிராமனும் குறிப்பிடத் தகுந்தவர்கள். அந்த அற்புத வரிசையில் இளம் வயதில் ஞானம் பெற்ற பாலகுமாரனும் வருகிறார்.
சொல்ல நினைத்ததைத் தொய்வில்லாமல் சொல்வதும், சொல்லிப் புரியவைக்க முடியாத கருத்துக்களை இனிய தமிழில் பானகமாகக் கரைத்துக் கொடுப்பதிலும் பாலகுமாரன் புகழ் பெற்றுவிட்டார்.
தொப்புள் கொடியின் துடிப்பை ரசாயனமாக்கி 'கண்ணே கலைமானே' படைத்துள்ளார்.
21-ஆம் நூற்றாண்டில் பெண்ணைப் பெற்ற மனிதர்களுக்கு தீர்வும், நம்பிக்கையும், சுமை இறக்கும் பெண்களையும் அடையாளம் காட்டி இருக்கிறார் திரு. பாலகுமாரன்
இவரது நாவலை - புதினத்தை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம்.
- திருமகள் நிலையத்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :