கண்ணீரால் காப்போம்

ஆசிரியர்: பிரபஞ்சன்

Category நாவல்கள்
Publication விகடன் பிரசுரம்
FormatPaper Back
Pages 248
ISBN978-93-88104-22-7
Weight300 grams
₹215.00 ₹204.25    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒரு மனிதன், பிறிதொரு மனிதனை அடிமைப்படுத்தல், இழுக்கு. அடிமைப்படுத்துபவனுக்கும் படுபவனுக்கும் ஆன இரண்டு பேருக்குமே இழுக்கு தவிரவும். அது இயல்பும் அன்று எந்த மனித உயிரும், அடிமைச் சாசனத்தோடு பிறப்பது இல்லை. கட்டற்ற வானமே போல, காற்றைப் போல ஊற்றிட்டுக் கிளம்பும் நீரைப் போல, சுதந்திரமாகவே பிறக்கிறது எந்தக் குழந்தையும். மேலும் அடிமைத்தனம் இயற்கையும் அன்று. தனிமனிதனுக்குப் பொருந்தும் இந்த நியாயம், தேசங்களுக்கும் பொருந்தும். எந்த நாடும், பிறிதொரு நாட்டை ஆக்கிரமிக்கவோ, அடிமைப்படுத்தவோ இயற்கை உலகில், எந்த நியாயமும் இல்லை. அது சாத்தியமும் இல்லை. அடிமைத்தனத்தை எந்த உருவத்திலும், நாகரிகச் சமுதாயம் அனுமதிக்க முடியாது ஏன்? மனிதன் சுதந்திரமானவன். அவன் தனக்கென்று ஒரு மூளையும், மனமும், கண்களும், கைகளும் கொண்டவனாக இருக்கிறான். எந்தக் கலாசாரமும், எந்த நாகரிகமும், எந்த மொழியும் பிறிதொரு மனிதனிடமோ, தேசத்தினிடமோ திணிக்கப்பட முடியாது. ஏனெனில் இன்னொன்றை விட ஒரு கலாசாரம், நாகரிகம் உயர்ந்தது இல்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :
பிரபஞ்சன் :

நாவல்கள் :

விகடன் பிரசுரம் :