கண்ணதாசன் கவிதைகள் பாகம் 1 & 2

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category கவிதைகள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaper back
Pages 312
ISBN978-81-8402-621-4
Weight250 grams
₹160.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தேர்வேந்தன் நளனோடும் காதல் மாது
சிலைபோலும் தமயந்தி அணையின் மீது
போர்செய்த கலையழகை உணர்ச்சி யோடு
புகழேந்தி சொல்கிறான்; மங்கை அங்கோர்
ஏர்பூட்டி உழுதாளாம்; எவ்வா றென்றால்
இருகொங்கை ஏராக, மாதின் மேனி
ஏர்சேர்ந்த நுகமாக, வியர்வை நீரே
எழில்நீராய்ப் பாய்ந்தோடக் காதலுக்கு
வரப்பெடுத்தே உழுதாளாம்! காம மென்னும்
வளமான பயிர்வளர்த்து மகிழ்வுற்றாளாம்!
பரிப்படையும் கரிப்படையும் பெற்ற மன்னன்
பாவையினால் உழப்பட்டான்! தானும் அந்தச்
சிறப்புடைய உழவுக்குச் சிரங்கு னிந்தான்
சில்லென்று பூரித்தான்! மெய்ம்ம றந்தான்!
வரப்பெடுத்த காமத்தை வரம்பு மீறி
வழங்குகிறான் என்றாலும் மணக்கும் வெண்பா!

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

கவிதைகள் :

கண்ணதாசன் பதிப்பகம் :