கண்ணதாசன் கவிதைகள் (பாகம் 7)

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category கவிதைகள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 356
ISBN978-81-8402-626-9
Weight300 grams
₹210.00 ₹199.50    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் பாரதி, பாரதிதாசனோடு கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கும் நிலையான இடமுண்டு என்பதை, அவர் தமிழுக்கு வழங்கியிருக்கிற மகத்தான கவிதைகள் நிரூபிக்கின்றன. கவிஞர், தமிழ் இலக்கியத்துக்கும் தமிழ் வளர்வதற்கும் ஆற்றியிருக்கிற பணிகள் கணக்கிலடங்காதவை.சமுதாயத்துக்குப் பயன்படுகிற விஷயங்களைச் சந்தங்களோடு அவருக்கே சொந்தமான எளிய நடையில் கவிதைகள் புனைந்திருப்பதால் அனைவரும் முனைந்து படிக்கிறார்கள். அவருடைய கவிதைகள் அரும்பெரும் செல்வமெனப் போற்றத்தக்கவை.
கவிஞரின் கவிதைச் செல்வங்களை எல்லாம் பாதுகாத்து வைத்திருந்து, தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயனளிக்கும் வண்ணம் சிரமம் பாராது, கவிஞரின் மறைவுக்கு முன் தொகுத்துக் கொடுத்திருந்தார், கவிஞரின் அருமைத் தம்பி இராம. கண்ணப்பன் அவர்கள். சிரமம் பாராது கண்ணதாசன் அவர்களின் கவிதைகளைத் தொகுத்தளித்ததனால், கவிஞர் கண்ணதாசன் அவர்களின் ஏழாவது கவிதைத் தொகுதி இப்பொழுது தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ளது. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கவிதைகளைத் தொகுத்தளித்த திரு. இராம. கண்ணப்பன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

கவிதைகள் :

கண்ணதாசன் பதிப்பகம் :