கண்டிவீரன்

ஆசிரியர்: ஷோபா ஷக்தி

Category சிறுகதைகள்
Publication கருப்புப் பிரதிகள்
FormatPaperback
Pages 192
First EditionOct 2014
2nd EditionOct 2014
ISBN978-81-929715-0-6
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$7.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர்கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடிய சிறுகதைகள் 2011-14 காலத்திற்குள் எழுதப்பட்டவை. ஆன்மாவை பறித்துக் கொண்டு அம்மணத்தை பரிசளித்த இயக்கப் பெருமிதங்களை குலைத்த ரூபங்கள், கற்பு, ஆண்மை போன்ற தேச, தேசிய, தமிழ், ஜம்பங்களை விட்டு விலகி பயணிக்கும் 10 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு.
பனைமரத் தீவொன்றிலிருந்து போரின் திசை வழியில் வெளியேறிய தமிழ் மனமொன்று, உலக சமூகங்களுக்குள் நின்று தனது அரசியல், பண்பாட்டு மோதலை நிகழ்த்திக் கொள்வதோடு அதன் அனுபவத்தை உலகிற்கு வழங்க வல்லவையாகவும் இருக்கக் கூடியது ஷோபாசக்தியின் சிறுகதைகளும் நாவல்களும். அதனால்தான் மிகக் குறுகியக் காலத்தில் அவரது "ம்", "கொரில்லா", "எம்.ஜி.ஆர் கொலை வழக்கு" போன்ற ஆக்கங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலக வாசகர்களை சென்று சேர்ந்துள்ளன. இப்பிரதியை வெளியிடும் அனுபவத்தை வழங்கிய நண்பர் ஷோபாசக்திக்கு நன்றி. உள்வடிவமைப்பையும், முகப்பையும் வடிவமைத்த தோழர்கள் ஜீவமணி, விஜயனுக்கும், கருப்புப் பிரதிகளின் சகபிரதிகளான அமுதா, தியோ ரூபன் (பிரான்ஸ்), மதிவண்ணன், புனித பாண்டியன், விஜய் ஆனந்த் (பெங்களுரு) பானு-தமயந்தி (நார்வே) மெலிஞ்சி முத்தன் (கனடா) ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :