கண்கள் கடந்த காகித வீதிகள்

ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்

Category கட்டுரைகள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaper back
Pages 160
First EditionMay 2010
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நூல்கள் சிலவற்றுக்கு நான் எழுதிய முன்னுரைகளும், இதழ்கள் சிலவற்றுக்கு அவ்வப்போது நான் எழுதிய கட்டுரைகளும் 'கண்கள் கடந்த காகித வீதிகள்' என்னும் இத்தொகுப்புள் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியங்கள் குறித்தும், பிறமொழி இலக்கியங்கள் குறித்தும் பேசும் கட்டுரைகள் இந்நூலில் இருக்கின்றன. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தொல்காப்பியப் பூங்காப் பற்றிய ஒரு சிறிய மதிப்பீடும், நடுவண் அரசில் அமைச்சராகப் பணியாற்றி மறைந்த முரசொலி மாறன் அவர்களோடு பழகி நானறிந்த அவரது படிப்புத் தாகம் பற்றிய ஒரு குறுங்கட்டுரையும் - உவமைக்கவிஞர் சுரதா குறித்த ஆய்வுச் சிறுசித்திரமும் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பற்றிய, சற்று நீட்சியுடையதான கட்டுரையில் அவருடைய முப்பரிமாண வளர்ச்சி, முதல்முறையாக வடிவம் துலங்க எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
முன்னுரைத்திலகம் சிலம்பொலியாரின் முன்னுரைகள் அடங்கிய தொகுப்புக்கு நான் தந்த முன்னுரையும் இத்தொகுப்பில் உண்டு. இன்னும் தொகுக்கப்படா நிலையில் எத்தனையோ கட்டுரைகள் இருக்கின்றன. தேடித் தொகுக்க வேண்டும்.
பொலிவுமிக்க நூலுக்குப் பூம்புகார் பதிப்பகம் என்பது ஒரு பொருத்தமுள்ள பொன்மொழி. இந்நூலை அச்சில் உலாவிடும் பூம்புகார் பதிப்பகத்திற்கும், அதன் உரிமையாளர் எம்.ஜே. பிரதாப்சிங் அவர்களுக்கும் என் நன்றி என்றும் போல.
- ஈரோடு தமிழன்பன்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஈரோடு தமிழன்பன் :

கட்டுரைகள் :

பூம்புகார் பதிப்பகம் :