கணிதமேதை ராமானுஜம்

ஆசிரியர்: க. சாந்தகுமாரி

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
Format Paperback
Pages 96
Weight150 grams
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கணிதமேதை ராமானுஜன் குறுகிய காலம் என்றால், மிகக் குறுகிய காலமே இம்மேதை வாழ்ந்து வந்தாலும் கூட இந்தக் குறுகிய கால வாழ்க்கையில் இவர் ஆற்றிய பணி உண்மையில் போற்றுதற்குரியது. இவரது அரும் பெரும் படைப்புகள் ஒவ்வொன்றும் விலை மதிக்க முடியாதவை என்றால் மிகையல்ல. இவருடைய அரிய தேற்றங்களைக் கொண்ட மூன்று நோட்டுப் புத்தகங்களையும் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இந்த நாட்டிற்காக விட்டுச் சென்றிருக்கிறார்.
ஒரு தேற்றம், இரண்டு தேற்றங்கள் அல்ல ஏறக்குறைய நாலாயிரம் தேற்றங்கள் என்றால் யார்தான் ஆச்சரியப்பட மாட்டார்கள்? அவைகளில் என்ன விசேடம் என்றால் அவைகள் எதற்கும் நிரூபணங்கள் இல்லை. எனவே தான் டாட்டா ஃபண்டமென்டல் ரிசர்ச் பவுண்டேஷனிலுள்ள கணித இயல் ஆராய்ச்சியாளர்கள் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ளுகிறார்கள்; இதுவரைக் கண்டு பிடிக்கப்படவில்லை.
இவ்வளவு தேற்றங்களைக் கண்டு பிடித்தவர் சாமானியர் அல்லர்; நிச்சயமாகத் தெய்வ அருளைக் குறைவறப் பெற்றவரே யாவார். இத்தகைய சிறப்புகளையெல்லாம் கொண்டு திகழ்ந்த தால்தான் பேராசிரியர் ஹார்டி “என்னிடமிருந்து ராமானுஜன் அறிந்து கொண்டதை விடவும் அவரிடமிருந்து நான் அறிந்து கொண்டவைதான் கூடுதல்” என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க. சாந்தகுமாரி :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :