கடைசிக்கோடு
ஆசிரியர்:
ரமணன்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81?id=1+3668
{1 3668 [{புத்தகம் பற்றி இமயமலையின் மற்ற சிகரங்கள் எல்லாம் கைலாஷ். நங்கபர்வதம், கல்கண்ட் என இந்து புராணங்களுக்கு சாட்சி சொல்லும் பெயர்களாலோ அல்லது கிஞ்சன்ஜங்கா போன்று அந்த பிரதேசத்தின் பெயராலேயே அழைக்கப்படும் போது உலகிலேயே உயரமான சிகரமான எவரெஸ்ட்டுக்கு மட்டும் ஏன் அந்த பெயர்? இந்தியக் கணைகண்டத்தின் முதல் மேப்பை சரியான அளவுகளுடன் தயாரிக்க 1802இல் கர்னல் வில்லியம் வாம்ட்ன் என்ற சர்வேயர் சென்னை மெரினா கடற்கரையில் முதல் கோடிட்டு மேற்கொண்ட ஒரு மிக சவாலான 40 ஆண்டு பயணத்தின் இறுதியில் நிகழ்ந்த ஆச்சரியம் தான் "எவரெஸ்ட்'',உலக புவியியல் பாலாற்றில் சர்வேக்களுக்காக மேற்கொண்ட பயணங்களிலேயே மிகக் கடினமானதாக வர்ணிக்கப்பட்டிருக்கும் இந்த பயணங்களில், பணியில் பலியானவர்களின் 'எண்ணிக்கை அந்த காலகட்டத்தில் நடந்த எந்த ஒரு போரை விடவும் அதிகம், கர்னல் லாம்டன் எழுதி குவித்திருக்கும் பயணக்குறிப்புகளும் அன்றைய ஆரம் கிலேய ' நிர்வாகம் பதிவு செய்திருக்கும் குறிப்புகளும் இன்றும் கொல்கத்தா மற்றும் டேராடூன் புவியியல் சர்வே அலுவலக அலமாரிகளில் தூங்கிக் கொண்டிருக்கின்றன, அவற்றில் சிலவற்றின் அடிப்படையிலும், சில ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளின் அடிப்படையிலும் இந்திய வரைபடம் உருவாகியிருப்பதை இந்த 'கடைசிக் கோடு' உண்மை கதை சொல்லுகிறது. ஒரு தேசம் உருவானதைச் சொல்லுவது சரித்திரம். அந்த தேசத்தின் வரைபடம் நமக்குச் சொல்வது பூகோளம், இந்த கடைசிக் கோடு ஒரு இந்திய பூகோளப் படம் எழுந்த சரித்திரத்தை சொல்லுகிறது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866