கடவுள் ஒருவரே

ஆசிரியர்: வ.உ.சிதம்பரம் பிள்ளை

Category கட்டுரைகள்
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 128
Weight150 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereவிடுதலைப் போராட்டத்தைப் போலவே தமிழ் இலக்கிய வரலாற்றிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கால கட்டத்தில் வாழ்ந்த வர் வ.உ.சி.
விடுதலை வேள்வியின் தொடக்ககால அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கி வரலாறு படைத்தவரான அவர், இலக்கியத் துறையிலும் சாதனைகள் நிகழ்த்தியவர்.
மொழி பெயர்ப்பாளராகவும் உரையாசிரியராகவும் பதிப்பா சிரியராகவும் விளங்கிய வ.உ.சி. சிறந்த கட்டுரையாளராகவும் | விளங்கிப் பல அரிய கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றுள், என் பார்வைக்குக் கிடைத்தவை இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன.விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன்பே இலக்கிய முயற்சிகளில் கவனம் செலுத்தினார். 1900 ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் 'விவேகபாநு' என்ற ஆன்மீகத் திங்கள் இதழ் வெளிவருவதற்கு முன்னின்று பெரிதும் உழைத்தவர் அவர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழில் வெளிவந்த ஆன்மிகத் தொடர்பான இதழ்களுள் குறிப்பிடத்தக்கது. 'விவேகபாநு'. இந்த இதழில்தான் வ. உ. சி. யின் முதல் கட்டுரையும் வெளிவந்தது. 'கடவுளும், பக்தியும் என்பது கட்டுரைத் தலைப்பு. கடவுளைப் பற்றியும் பக்தியைப் பற்றியுமான உன்னதமான விளக்கங்கள்

பஞ்சபூதச் சேர்க்கையாகக் காணப்படும் இவ்வுலகத்தின்கண் தோன்றிய எண்ணிறந்த உயிர்களையும் பிரித்துப் பார்ப்போமாயின், அவையாவும் தேவர், மனிதர், மிருகம், பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, ஸ்தாவரம் என்று சொல்லப்படும் எழுவகைப் பிரிவுகளுள் அடங்குமென்பது பிரத்தியக்ஷம். இவைகளில் ஆகாயம், வாயு, அக்னி, அப்பு என்னும் லோகங்களாயிருக்கின்ற சித்தலோகம், கந்தர்வ லோகம், தேவலோகம், பிதிர்லோகம் என்பவைகளில் வசிக்கும் சித்தர், கந்தர்வர், சூரியன் முதலிய தேவர்கள், சந்திரன் முதலிய பிதிர்க்கள், அயிராவதம் முதலிய மிருகங்கள், கருடன் முதலிய பணிகள், கற்பகவிருக்ஷம் முதலிய தருக்கள், இவர்களை யொழித்து ஆராய்வோமாயின் யாவற்றிலும் மனிதனே உத்தம் ஜாதியென அறிவோம். எதனாலெனின் மிருகம், பறவை, ஊர்வன, நீர் வாழ்வன இவை இகலோகப் புத்தி மாத்திரமுடையனவாயும், விருஷாதிகள் அது கூட இல்லாதவனாயுமிருக்கின்றன. மனிதனோ இகபர மிரண்டிற்கும் அவசியமான புத்தியை உடைத்தாயிருக் கின்றான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வ.உ.சிதம்பரம் பிள்ளை :

கட்டுரைகள் :

வ.உ.சி.நூலகம் :