கடவுள் அமைத்த மேடை

ஆசிரியர்: தமிழ் மதுரா

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
Formatpaper back
Pages 224
Weight200 grams
₹160.00 ₹136.00    You Save ₹24
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தடக் தடக் என்று தாளலயத்தோடு அந்த ரயில் நிலையத்தில் நுழைந்த மும்பை புறநகர் ரயில்களை சற்று திகிலோடு பார்த்தபடி டிக்கெட் வாங்கும் வரிசையில் நின்றிருந்தான் சிவபாலன். திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு நிற்பதைப் போன்ற நீண்ட வரிசை. இதில் எப்படி டிக்கெட் வாங்கி என்று மலைத்தவனுக்கு ஆறுதல் கூறும் முகமாக சற்று வேகமாகவே நகர்ந்தது.
பத்துமணிக்கு அலுவலகத்தில் ரிப்போர்ட் செய்தால் போதும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தும் ஆறுமணிக்சே எழுந்து, முகசவரம் செய்து, குளித்து எட்டு மணிக்கே ரயில் நிலையத்துக்கு வந்து விட்ட தனது முன்ஜாக்கிரதையை மெச்சிக் கொண்டான்.
அலுவலகம் இருக்கும் அந்தேரியை சீக்கிரம் அடைந்து விட்டால் அந்தப் பகுதியை சுற்றிப் பார்த்துவிட்டு காலை சாப்பாட்டை அங்கேயே ஏதாவது ஒரு உணவகத்தில் முடித்து விடலாம் என்ற அவனது திட்டத்துக்கு பெரிய வேட்டு விழுந்துவிடும் போல் தெரிந்தது.
இரும்பு யானைகளை வரிசையாய் அடுக்கியது போன்ற ரயில் பெட்டிகளையும், அதிலிருந்து ஏறும்புக் கூட்டமாய் சுறுசுறுப்போடு இறங்கி ஓடிய மனிதர்களையும் வேடிக்கை பார்த்தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ் மதுரா :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :