கடவுளை மாற்றுவோம்

ஆசிரியர்: டி.ஏம்.மணி

Category இஸ்லாம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹20.00 ₹19.00    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereமணியான தலைவர் தீண்டாமைக்கெதிராக பல இயக்கங்கள், கட்சிகள், பாடப்புத்தகங்களில் முழக்கங் கள் அனைத்தும் வெற்று வேஷங்களே என்பதை நிரூபிக்கும் வகையில் எங்கும் தீண்டாமை தாண்டவமாடி வருகின்றது. இந்தச் செயற்கை சடங்குகளை உடைத் தெறிந்துவிட்டு தீண்டாமை எனும் கொடும் அரக்கனை கொன்றொழிக்க 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருபவரே சிந்தனைச் செம்மல் டி.எம். மணி அவர்கள். தீண்டாமைக்கெதிராக வாய் கிழய மேடையில் முழங்குவர் சிலர். மேடையை விட்டு இறங்கியதும், துண்டை உதறுவதுபோல் தமது கொள் கையையும் உதறிவிடுவர் பலர். தீண்டா மைக்கெதிராக போராடுகிறோம் என்று சொல்லிக் கொண்டு மக்களை விட்டு ஒதுங்கி சொகுசு மாளிகையில் வசிப் போர் பலர். பதவி சுகம் அனுபவிக்க, தமது சமூகத்தை அடமானம் வைப் போரும் உண்டு. ஆனால் டி.எம். மணி அவர்கள், இவர்களை விட்டு வேறு பட்டு நிற்கிறார். ஆம்! எந்த மக்களின் விடுதலைக்காக இவர் போராடுகிறாரோ, அவர்களு க்கும் இவருக்கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் நாம் காண முடிய வில்லை. அம் மக்களோடு மக்களாக கலந்து, 24 மணி நேரமும் அவர்களது விடுதலைக்காக சிந்தித்துக் கொண்டும், செயல்பட்டுக் கொண்டும் இருப்பவரே டி.எம்.மணி அவர்கள். அவரது அனுபவம் தீண்டாமை அரக் கனை அழிக்க ஒரு அற்புதமான வழி யைக் காட்டியிருக்கின்றது. அதனைச் சுவைபட அவர் விவரித்த சொற் பொழிவு, இங்கு நூல் வடிவம் பெற்றிருக் கின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
இஸ்லாம் :

வேர்கள் பதிப்பகம் :