கடவுளைத் தேடாதீர்கள்

ஆசிரியர்: தென்கச்சி கோ சுவாமிநாதன்

Category ஆன்மிகம்
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages 136
First EditionDec 2006
15th EditionSep 2018
ISBN978-81-89780-86-7
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹140.00 $6    You Save ₹7
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவிரிந்து பரந்த உலகத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு. செடியில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள் முதல் பட்டுப்போன பிறகும் பலன் கொடுக்கும் மரங்கள் வரை, மழைக்காலத் தேவைக்கென கோடையிலேயே சேமிக்கும் எறும்புகள் முதல் தன் இனத்தோடு பகிர்ந்துண்ணும் காகங்கள் வரை மனிதர்களுக்கு வாழ்க்கைக்கானப் படிப்பினைகளை வழங்கிக்கொண்டே இருக்கின்றன.இந்தப் படிப்பினைகளை உணராமல், பிரச்னைகளுக்கு வடிகால் தேடி ஆன்மிகத்தை நாடுகின்ற மனிதர்கள் போலிகளின் கைகளில் சிக்குண்டு ஏமாறுவது கசக்கின்ற உண்மை. உண்மையான ஆன்மிகம் எது? உய்த்துணர வேண்டிய வாழ்வின் உட்பொருள்கள் என்னென்ன? மெய்ஞானம் முன்மொழியும் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது? &இந்தக் கேள்விகளுக்கான விளக்கங்களோடு சக்தி விகடன் இதழில் தென்கச்சி கோ.சுவாமிநாதன் எழுதிய கலகல கதைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.அடுத்தவர்களுக்குச் சொல்லும் ஆறுதல்களில், உரிய நேரத்தில் செய்யும் உதவிகளில், ஆத்மார்த்தமான பாசப் பகிர்தல்களில் வெளிப்படும் இறை அனுபவத்தை உணராமல், ஆலயங்களில் இறைவனைத் தேடும் பேதைகளின் தலையில் பேனாவால் குட்டியிருக்கிறார் தென்கச்சி.குழலின் உட்சென்று வெளி

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் நண்பர்களுக்கு இப்போதே ஓர் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். இதில் எதையும் நானாகச் சொல்லவில்லை. ஏற்கெனவே சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள், அதில் கொஞ்சம் வேடிக்கை சேர்த்திருக்கிறேன். அவ்வளவுதான். 'சக்தி விகடன்' இதழின் கடைசிப் பக்கங்களில் வெளிவந்த இந்தக் கதைகள், இப்போது விகடன் பிரசுரம் மூலம் புத்தக வடிவில் வெளிவருவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இன்றைய மனிதனே, மனிதனுக்குச் சவாலாக மாறிக்கொண்டிருக்கிறான் என்பது உண்மை , அவனுக்குப் பணம் சம்பாதிக்கத் தெரிகிறது. நிம்மதியை சம்பாதிக்கத் தெரியவில்லை. நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஆசையில், பணம் சம்பாதிக்கிற முயற்சியிலேயே அதற்கு நிம்மதியை விலையாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். வெளிப்புற வளர்ச்சியின் வேகம் அதிகமாக இருக்கிறது.உள்புற்ற வளர்ச்சியின் வேகம் குறைவாக இருக்கிறது. இன்றைய அமைதியின்மைக்கு இதுதான் காரணம். ஆன்மிக வெளிச்சம்தான் இதற்குச் சிறந்த தீர்வாக அமையமுடியும். ஆன்மிகம் என்ற சொல்லே இன்றைக்குத் தவறாப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. ஆலயத்துக்கு உள்ளே நுழைந்து, 'ஆண்டவன் எங்கே இருக்கிறான்?' என்று தேடுவதல்ல ஆன்மிகம், மனிதனுக்குள்ளே புகுந்து கடவுளைக் கண்டுப்பிடிப்பதுதான் ஆன்மிகம். பகுத்தறிவு என்பது ஆன்மிகத்துக்கு எதிரானதல்ல. அது மூடநம்பிக்கைக்கு எதிரானது. இந்தப் புத்தகத்தில் ஆங்காங்கே சில ஆன்மிக வெளிச்சங்கள் தெரியும். அந்த வெளிச்சத்தில் நம்மை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

பிறந்தது : அரியலூர் மாவட்டம்… கொள்ளிடக் கரையோரத்து கிராமம் - தென்கச்சி. விவசாயக் குடும்பம். படித்தது : பி.எஸ்சி. (வேளாண்மை ), கோவை விவசாயக் கல்லூரி.. பணிகள் - தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக 3 ஆண்டுகள். தென்கச்சி ஊராட்சி மன்றத் தலைவராக 7 ஆண்டுகள். வானொலியில் 24 ஆண்டுகள். சென்னை வானொலியில் உதவி நிலைய இயக்குநராகப் பணியாற்றி 2002-ல் பணி நிறைவு. 17-வது வயதில் எழுதிய முதல் கவிதை, பாவேந்தர் பாரதிதாசனின் 'குயில்' இதழில் (14.07.1959) வெளிவந்தது. 'இன்று ஒரு தகவல்' என்ற வானொலி நிகழ்ச்சியை 14 ஆண்டுகள் தொடர்ந்து நாள்தோறும் வழங்கினார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அனைவரும் ரசித்த 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சிக்கு சொந்தக்காரர் இன்று நம்மிடையே இல்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
தென்கச்சி கோ சுவாமிநாதன் :

ஆன்மிகம் :

விகடன் பிரசுரம் :