கடல் வேந்தன்

ஆசிரியர்: சாண்டில்யன்

Category நாவல்கள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 392
First EditionMay 1993
10th EditionJan 2017
Weight250 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
$7.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

பதிற்றுப்பத்து' சங்க நூலை வைத்து கடற்கதை ஒன்றை எழுத வேண்டுமென்று நீண்ட நாட்களாக நண்பர்கள் பலர் என்னைத் தூண்டி வந்தார்கள். அந்தத் தூண்டலின் விளைவுதான் “கடல் வேந்தன்” கதை.
பதிற்றுப்பத்து நூலின் ஐந்தாம் பத்தை இயற்றிய பரணர் பெருமானின் இனிய கவிதையும் என்னைக் கவர்ந்தது. அதில் காணப்பட்ட கடற்பிறகோட்டிய செங்குட்டுவனும் என்னைக் கவர்ந்தான். பரணர் கவிதைக்கு அடிமையாகி தனது புதல்வனான குட்டுவன் சேரலையே பரணருக்கு பரிசாகத் தந்துவிட்ட அந்த மாமன்னன் குணமும் என் மனத்தை ஈர்க்கவே, செங்குட்டுவனை வைத்தே கதை எழுதிவிட முடிவு செய்தேன். அதற்காக பதிற்றுப்பத்துக்கு புலியூர்க் கேசிகன் எழுதிய தெளிவுரையையும் படித்தேன். பேராசிரியர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய “பண்டை நாளைச் சேர மன்னர்கள்'' என்ற வரலாற்று நூலையும் படித்தேன். இக்கதைக்கு வேண்டிய மூலதனம் இந்த இரண்டு நூல்களிலுமே கிடைத்துவிட்டன.

உங்கள் கருத்துக்களை பகிர :