கடன்

ஆசிரியர்: தாஸ்

Category வணிகம்
FormatPaperback
Pages 104
ISBN978-93-85118-74-6
Weight150 grams
₹80.00 $3.5    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கடன் வாங்குவதும் பணம் செலவழிப்பதும் தகாத காரியமாகக் கருதப்பட்ட காலத்தை நாம் கடந்துவிட்டோம். தனிநபர்களில் தொடங்கி ஒரு தேசம் வரையிலும் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் கடன் அத்தியாவசியமாகி விட்டது. அதே வேளையில், வங்கிகள் கடன் வழங்குவதை சமூக பொருளாதார வளர்ச்சியாக எண்ணிய காலமும் மாறிவிட்டது. இப்போது, வங்கிகளைப் பொருத்த மட்டிலும் கடன் என்பது ஒரு விற்பனைப்பொருள்... நேரடியாகவும் மறைமுகமாகவும் அதீத லாபம் தரக்கூடிய வணிகம்.கடந்த 15 ஆண்டுகளில் ‘பர்சனல் லோன்‘ என்கிற தனிநபர் ‘எதற்கும்‘ பயன்படுத்தக்கூடிய கடன்களும், நினைத்த நொடியில் செலவழிக்கிற மனோபாவத்தை வளர்க்கிற கிரெடிட் கார்டுகளும் அள்ளி வழங்கப்பட்டுள்ளன.தனியார் வங்கிகளின் மார்க்கெட்டிங் உத்திகளில் சிக்கி லோனும் கிரெடிட் கார்டும் வாங்கிய பலர், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தும் சூத்திரத்தை மட்டும் அறிய முடியவே இல்லை. இச்சூழலில் ‘கடன்' என்கிற இந்நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே கடன் வாங்கி, திட்டமிட்டுத் திருப்பிச் செலுத்துவோருக்கும், வாங்கிய கடனில் விழிபிதுங்கி நிற்போருக்கும் மட்டுமல்ல... இனி கடன் வாங்க வேண்டிய அவசியத் தேவை உள்ளவர்களுக்கும் இந்நூல் ஓர் அர்த்தமுள்ள அகராதி. உங்கள் கவலைக் கடன்களைத் தீர்க்க இந்நூல் நிச்சயம் உதவும். நூலின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள ‘கடன் நல்லது' பக்கங்களும் மிகப்பயனுள்ளவை. என்ன தேவைக்கு எந்தக் கடனை எப்படி வாங்க வேண்டும் என்பதை அறிய அவை உதவும். அவசியம் என்றால் ரகசியமே இல்லாமல் கடன் வாங்கலாம்... அழகாகத் திருப்பிச் செலுத்தலாம்... உங்கள் தேவை சிறப்பாக நிறைவேற வாழ்த்துகள்!.

உங்கள் கருத்துக்களை பகிர :
தாஸ் :

வணிகம் :

சூரியன் பதிப்பகம் :