ஒளவையார் தனிப்பாடல்கள்

ஆசிரியர்: புலியூர் கேசிகன்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 176
ISBN978-81-947327-1-6
Weight250 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'ஒளவையார்' என்ற பெயராற் பலகாலத்தும் பலர் நிலவியிருந்தனரோ, அன்றி அறிவிலே திருவுடைய பெண்பாலர் எல்லாரும் ஔவையார் என்னும் ஒரு பெயரால் அழைக்கப் பட்டனரோ நாம் அறியோம். 'ஔவை' என்ற சொல் மூதாட்டி யென்ற நினைவையும் தருவதாகும். இந்த முதுமை, ஆண்டின் முதிர்ச்சியைக் குறித்ததோ, அல்லது அறிவின் முதிர்ச்சியைக் குறித்ததோ நாம் அறியோம். - நாம் அறிந்தனவெல்லாம் தமிழ் ஆர்வமிக்க சான்றோர்கள் திரட்டிச் சேர்த்துப் பாதுகாத்து வைத்த தனிப்பாக்கள் மட்டுமே ஆகும். அவற்றைப் பொருளுடன் அறிந்து, சிந்தித்து, அவற்றால் அறியலாகும் ஔவையாரின் செவ்வியினையும், குண நலன்களையும் உளங்கொண்டு போற்றுவது மட்டுமே நம்மால் இயல்வதாகும். இந்த நூலைப் பயிலுகின்ற அன்பர்கள், இதனை மனத்திற் கொண்டே கற்க வேண்டும் என விரும்புகிறேன்.
எந்தச் செய்யுள் எந்த ஔவையாரால் பாடப்பெற்றது? அஃது எழுந்த காலம் என்ன? அந்த ஔவையாரின் வரலாறு யாது? அவரோடு தொடர்பு உடையவர் யார்? அவர் செய்த செயல்கள் எல்லாம் என்னென்ன? இப்படிப்பட்ட சிந்தனைகளையெல்லாம் ஆராய்ச்சித் துறையிலே அயராது ஈடுபட்டு இன்பம் காணுவோரான அறிவுசால் பெருமக்களுக்கு விட்டு விட்டு, நாம் இனிய தமிழ்ச்சுவையில் மட்டுமே மனஞ்செலுத்தி மகிழ்வோமாக.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் கேசிகன் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :