ஒற்றை வைக்கோல் புரட்சி

ஆசிரியர்: மசானபு ஃபுகோகா

Category சமூகம்
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 158
First EditionJun 1991
10th EditionDec 2014
ISBN978-93-84646-30-1
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹160.00 $7    You Save ₹8
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபுதிதாய் வருபவர்கள் இயற்கை வேளாண்மை " என்பதற்கு, இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும். நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம் என்று பொருள் கொண்டால், ஃபுகோகா அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் கொடுப்பார். சரியாகக் கூற வேண்டுமானால், வேட்டையாடி சேகரித்த காலம் ஒன்றுதான் இயற்கை வேளாண்மைக் காலம். பயிர்களை வளர்க்கத் துவங்கியது கலாச்சாரக் கண்டுபிடிப்பாகும். அதனால் அதற்கு அறிவும் தொடர்ச்சியான முயற்சியும் தேவைப்படுகிறது. ஃபுகோகாவின் முறையில் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது. இயற்கையை ஆக்கிரமித்து அதை மேம்படுத்துவதில் அல்ல.

ஜப்பானின் தென்பகுதியில் உள்ள ஷிகோகு தீவிலுள்ள ஒரு சிறு கிராமத்தில் மாசானபு ஃபுகோகா நடைமுறையில் பயன்படுத்திவரும் ஒரு இயற்கை வேளாண்மை முறை, நவீன வேளாண்மையின் வேகமான சீர்குலைவைத் திருத்தி அமைக்க உதவும். இயற்கை வேளாண்மைக்கு, எந்திரங்கள், வேதியியற் பொருட்கள் போன்றவை தேவை யில்லை, களையெடுப்பும் சிறு அளவிலிருந்தால் போதுமானது. ஃபுகோகா, தனது நிலத்தை உழுவதோ, அதற்குத் தழையுரம் இடுவதோ கிடையாது. கீழ்த்திசை நாடுகளிலும், உலகின் இதர பகுதிகளிலும் ஆண்டாண்டு காலமாக விவசாயிகள் செய்து வருவது போன்று, வயலில் பயிரின் வளர்ச்சிக்காலம் முழுவதும், ஃபுகோகா நீரைத் தேக்கி வைப்பது கிடையாது. அவரது நிலம் உழப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும் இதர ஜப்பானிய உயர்தரப் பண்ணைகள் அளவுக்குச் சாகுபடி கிடைத்து, வருகிறது. அவரது வேளாண்மை முறைக்கு மற்றவைகளைக் காட்டிலும் குறைவான உழைப்பே தேவைப்படுகிறது. அது மாசுபாடு எதையும் ஏற்படுத்துவதில்லை . புதைபடிவ எரிபொருள் எதுவும் அதற்குத் தேவையில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
மசானபு ஃபுகோகா :

சமூகம் :

எதிர் வெளியீடு :