ஒற்றை ஓநாய் ஜாக் லண்டன் வாழ்க்கைக் கதை

ஆசிரியர்: மே பிளாக்கர் ஃப்ரீமேன் தமிழில் : சுப்பிரமணியன்.க

Category வாழ்க்கை வரலாறு
Publication அகல்
FormatPaperback
Pages 192
First EditionDec 2011
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹140.00 ₹126.00    You Save ₹14
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


ஜாக் லண்டன் வாழ்க்கை பற்றிய இந்த நூல், முக்கியமாக ஜாக்கின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தே அக்கறை செலுத்தியிருக்கிறது. பிள்ளைப் பிராயமே அமையாத, தன் வயதைவிட எப்போதும் பெரியவனாகவே எப்போதும் காட்டிக்கொள்ள முயன்ற பையனையும், தனக்கு வாய்க்காத பிள்ளைப்பிராயத்தை மீண்டும் எட்டுவதற்கு எப்போதும் முயற்சி, செய்துகொண்டிருந்ததால், ஒருபோதும் முழுமையான வளர்ச்சியடைந்த நபராக உருவாகாத ஜாக்கையும் பற்றியே இதில் கவனம் செலுத் தப்பட்டுள்ளது. எல்லா மனிதர்களையும் போலவே, ஜாக்கும் பல பெருந்தவறுகளைச் செய்தார். அவர் மகத்தான நபராக இருந்ததாலும், அவரது வாழ்க்கை , புகழ் வெளிச்சத்தில் அமைந்ததாலும் பல சிறிய மனிதர்கள், வெளித் தெரியாத நபர்களின் தவறுகளைவிட அவரது தவறுகள் பெரிதாகப் பட்டன. ஆனால் அவரது நற்பண்புகளும்கூட மகத்தான மனிதர்களுக்கு உரியவையாக இருந்தன. உடலளவிலும் உள்ளத்தளவிலும் பெரும் துணிச்சலை அவர் கொண்டிருந்தார். அவர் தனது வாழ்வையோ, சுதந்தி ரத்தையோ, பணத்தையோ, புகழையோ அபாயத்துக் குள்ளாக்க அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. தான் வலிமை மிக்கவர் என்ற பெருமிதம் கொண்டிருந்தார். பலவீனமானது ஆபத்துக்குள்ளாவது என்பது இயற்கை யின் விதி என அவர் அறிந்திருந்தபோதும், அவர் எப்போதும் பலவீன மானவர்களுக்கும் நோயாளிகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்குமாகவே போராடி வந்தார். அவர் பரிதாபம் காட்டாத ஒரே நபர், அவரேதான்.

உங்கள் கருத்துக்களை பகிர :