ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி

ஆசிரியர்: என்.கே.ரகுநாதன்

Category நாவல்கள்
Publication கருப்புப் பிரதிகள்
FormatPaperback
Pages 296
2nd EditionMay 2014
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹210.00 $9    You Save ₹21
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here


மிக அண்மையக் காலமாய் 'தமிழ் கூறும் நல்லுலகின் சிங்கங்காள்' களால், புலிகளால், இன்னபிறர்களால் 'தொப்புள் கொடி' உறவு என மிக உன்னதமாய் விதந்தோதப்படுகிற ஈழத் தமிழ் சமூகத்தின் சாதிய வன்மத்தை, அதன் இந்து-இந்திய கிராமச் சமூகத்தின் நகலெடுப்பாய் இருக்கும் பார்ப்பனியக் கட்டமைப்பை, மிக அடிப்படையான எளிய மனிதர்களின் புரிதலிலும் உளவியலிலும் நின்று வெளிப்படுத்துகிறது இந்நாவல்.
ஒரு சிறிய கிராமம், பனைமரம்தான் அதன் இயற்கை வளம். அங்குள்ளவர்கள், அம் மரத்தையே நம்பிக் காலத்தைக் கடத்துகிறார்கள். அவர்களில் இருவர், கால்களை நகர்த்தி வேறு ஊர்களுக்குப் போய், அங்கு கள் இறக்கிப் பிழைக்கத் தொடங்கினார்கள். அந்த ஊர்களின் முன்னேற்றம் அவர்களின் மனதில் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்த, அதனிமித்தம் தங்கள் பிள்ளைகள் இருவரைப் 'படிப்பிக்கிறார்கள். பல கஷ்ட துன்பங்களுக்கிடையில் அவர்களும் ஆர்வத்துடன் படித்து ஆசிரியர்களாகிறார்கள். 'அவர்களுடைய கிராமத்துக்குப் பக்கத்திலிருந்த ஒரு கிராமத்தில் தமிழறிஞர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இருவரும் அந்தத் தமிழறிஞரிடம் கல்வி கற்கப் போனார்கள். தமிழ் கற்ற அவர்கள், அவருடைய நாஸ்திகக் கொள்கையினால் கவரப் பெற்று காலப்போக்கில் உலகளாவிய ரீதியில் பரந்து விரிந்த மார்க்சியக் கொள்கையில் ஊறித் திளைத்து, தமது கிராமத்து வாலிபர்களை மட்டுமன்றி, அண்டை அயலில் 'உள்ள வாலிபர்களையும் ஒன்றிணைத்து சாதியொடுக்கு முறைக்கு எதிராக மட்டுமன்றி, உழைக்கும் மக்களை நசுக்குபவர்களுக்கெதிரான போராட்டங்களையும் முன்னெடுத்து, சகலரையும் எழுச்சி பெறச் செய்தார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :