ஒரு நீதிபதியின் விடுதலை முழக்கம்

ஆசிரியர்: நீதிபதி.ப.கோபாலகிருஷ்ணன்

Category ஆய்வு நூல்கள்
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 84
First EditionOct 2011
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$1.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

பழைய தஞ்சை மாவட்டம் சீர்காழி, பனங்காட்டாங்குடி கிராமத்தில் 1938ல் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தவர்தான் நீதிபதி கோபாலகிருஷ்ணன். திருப்பத்தூர், பெரியகுளம், ஜெயங்கொண்டான், திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் நீதிபதியாகப் பணியாற்றியிருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்ற இவர் தன் பள்ளிக்காலம் முதல் தீண்டாமைக் கொடுமையின் கோர வடிவங்கள் தன்மீது திணிக்கப்பட்டதை அனுபவித்திருக்கிறார். சாஸ்திர, சம்பிரதாயங்கள் கடவுள் நம்பிக்கைகள் எனஎவ்வித நம்பிக்கைகளுக்கும் ஆட்படாத இவர் தன்னை தந்தை பெரியாரின் சீடர் என்றே கூறிக் கொண்டார். அதன்படியே வாழ்ந்தார்.
நீதிபதி கோபால கிருஷ்ணன் அவர்களை சீர்காழி நண்பர் தாஹா உள்ளிட்ட 'சீர்காழி இஸ்லாமிய நல்லிணக்க மையம்' நண்பர்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள். இந்தச் சீர்காழி குழுவினர் அமைதியாக, ஆரவாரமில்லாமல் செய்யும் பணிகளின் சாட்சியம்தான் இந்த நூலும், இதைத் தொடர்ந்து நடக்கும் இன்னும் பல நற்செயல்களும். டி.எம்.உமர் ஃபாரூக் அவர்களைப் பொருத்தவரை அவர்கள் தங்கள் போராட்டங்களின் போது சிந்தித்தவர். நீதிபதி கோபாலகிருஷ்ணன் அவர்களின் அறிமுகம் கிடைத்த பின், அவர்களின் இல்லம் சென்று பலமுறை இஸ்லாத்தையும் இதர கொள்கைகளையும் ஆழமாக விவாதித்திருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :