ஒரு துளியின் துளித்துளி

ஆசிரியர்: தி.கு.இரவிச்சந்திரன்

Category கவிதைகள்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaperback
Pages N/A
First EditionJan 2018
ISBN978-93-9221339-7
$3      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


'ஒவ்வொரு நிகழ்விலும் அறிவியல் அளவு கவிதை ஒளிந்துள்ளது' என உணர்ந்த நுண்ணிய பார்வையின் கண்டுபிடிப்புகள் இக்கவிதைகள். உளப்பகுப்பாய்வு அறிஞராகத் திறனாய்வுலகில் நன்கு அறியப்பட்ட நண்பர் தி.கு.ர. வின் ஆளுமை, அடிப்படையில் கவிதையில் இருந்து முகிழ்த்தெழுந்தது. அப்துல் ரகுமானின் பயிற்சிப் பாத்தியில் எனக்கு முன்னேர் ஆன இவர் ஒரு வகையில் கவிதையின் பால்யத்தில் என் ஏகலைவனுக்குத் துரோணாச்சாரி. 'ஒரு கவிதைகூட இன்றி இந்த வாரம் கழிந்து போய்விடக் கூடாதெனப் பதறும்' மென்மனதிற்கே 'இலையில் வீழும் தூசியின் சப்தம் இடியாய் கேட்கும் பேரமைதி'யை உணர வாய்க்கும். கவிமனத்துள் மினுங்கிக் கொண்டிருக்கும் பூர்வ ஞாபகங்களின் கவியாளரான இவரளவிற்கு நுட்பமான சொற்பிரயோகத்தையும் சரளமான நடையையும் கவனத்துடன் கையாள்பவர்கள் இன்றைய கவிஞர்களில் மிகக் குறைவு. மொழி விளையாட்டாகவும், கடினப் பிரயோகமாகவும் உணரும் தருணங்களைக் கூர்ந்துணர, இலகுவும் அர்த்தச் செறிவும் கூடுகின்றன. தன்னுள் சதா உரையாடும் பிரத்யேகமான அவரது நங்கையின் நடமாட்டம் நிகழும் கவிதைகள் வாசகப் பொதுமை அனுபவமாகி அழகியல் இன்பத்தைக் கூர்மையாக்கித் தருகின்றன. நவீனத்துவத்தின் அழுத்தமான அடையாளத்தைக் கொண்டுள்ள இக்கவிதைகளில் சிலவற்றின் பின்நவீனத்துவத் திமிறல் அடுத்த கட்ட வளர்வை நோக்கி இவர் பயணிப்பதை உறுதி செய்கிறது. இந்த முதல் தொகுப்பு மூலம் அனுபவ சாரத்திலும் தத்துவ விசாரத்திலும் முதிர்ந்த கவிஞராக நம்முன் பரிணமிக்கவே செய்கிறார். பெரும்பாலான கவிதைகளின் கைப்பிரதிக்கு ‘முதல்மை' வாசகனாக உடனிருந்த என்னளவிற்கு இத்தொகுப்பின் வரவையும் வரவேற்பையும் வேறு யாரும் எதிர்ப்பார்க்க முடியாது.

உங்கள் கருத்துக்களை பகிர :