ஒரு தலித் போராளியின் வாழ்வும் அவர் காட்டிய வழியும்

ஆசிரியர்: டி.எம்.உமர் பாருக்

Category நாவல்கள்
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 44
First EditionJul 2015
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$1      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தன்னைப் பின்பற்றி வந்தவர்களிடம், இஸ்லாமிய மதமாற்றத்தால் எந்த இழப்பும் ஏற்படாது, பயன் மட்டுமே கிட்டும் என உமர் ஃபாரூக் உறுதி கூறினார், இஸ்லாமிய மதமாற்றத்தால் இட ஒதுக்கீடு போகுமே எனக் கவலை தெரிவித்தவர்களை நோக்கி அவர் சொன்ன பதில் அவரது சுயமரியாதை உணர்விற்கும் நறுக்கான பேச்சுக்கும் ஒரு நல்ல எடுத்துகாட்டு. “ஊனமுற்றோர் இருக்கையில் அமர ஊனப்படுத்திக் கொள்ளலாமா?" என்பது தான் அந்தப் பதில் கடவுளை மாற்றுவோம், இஸ்லாத்தில் பலதார மணம் உள்ளதே என்கிற கேள்விக்கு தரவுகளின் அடிப்படையில் பிற மதங்களைக் காட்டிலும் இஸ்லாத்திலும் அதிக அளவில் பலதாரமணங்கள் இல்லை என நிறுவினார்.நேற்று வரை செல்வமாக இருந்தவர் இன்று முகமது மைதீன். பள்ளிவாசலில் தொழுகைக்கு அனைவரையும் அழைக்கும் முஅத்தீனாக இருக்கிறார்.நேற்று வரை ஞான ராஜாக இருந்தவர் இன்று ஜமாலுத்தீன், பள்ளிவாசலில் முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்கும் இமாமாக இருக்கிறார்.நேற்று வரை ராஜேந்திரன் இன்று முகம்மது சுல்தான். எலெக்ட்ரிகல் கடையில் வேலை.
அருமை அண்ணன் டி.எம்.உமர்ஃபாரூக் அவர்களின் மரணம் அனைவருக்கும் ஓர் அதிர்ச்சியாகவே அமைந்தது. அண்ணன் அவர்களின் மரணச்செய்தி கேள்விப் பட்டதும், அன்புச் சகோதரர் அ. மார்க்ஸ் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள். ஆறுதலாக இருந்தது. பின்னர் தன் முகநூலிலும், அதுபற்றி ஓர் அருமையான இரங்கற் செய்தியை வெளி விட்டிருந்தார்கள். அடுத்து, தனது முகநூலில், தான் அண்ணன் டி.எம். உமர்பாரூக் அவர்களைப் பற்றிய நூல் ஒன்றை எழுதிட இருக்கின்றேன் என்றார்கள். சொன்னதை செய்பவர் அவர். நூலை எழுதிக் கொண்டிருக்கும்போது சில பல விபரங்களைக் கேட்டார்கள், சொன்னேன். அதன்பின் ஒரு கட்டுரை அளவிற்கு, முடிக்க விரும்பிய எழுத்து ஒரு சிறு நூல் அளவுக்கு இருக்கின்றது என்றார்கள். நூலாக வெளிவிட விருப்பம் தெரிவித்தேன். ஒத்துக்கொண்டார்கள். மிக்க நன்றி.

உங்கள் கருத்துக்களை பகிர :