ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு

ஆசிரியர்: அம்பை

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 168
ISBN978-93-82033-08-0
Weight200 grams
₹190.00 ₹180.50    You Save ₹9
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எழுதுவதை எழுதி முடித்துவிட்ட நிறைவு நிலையை எட்டி வாழ்க்கையின் இழுபறிகளைக் கடக்கும்போது கதைகள் இல்லாமல் போகின்றன. அந்தச் சமையல்காரப் பெண்மணி யின் நிலைமையில் என்னை இருத்திக்கொண்டால், என் முறுக்குகள் அழகான வட்டங்களாக இல்லை; சில முறிந்து போயிருக்கின்றன; சில அதிகம் வெந்து சிவந்துவிட்டன; சில வேகவில்லை ; மாவு சரியாகக் கூடாததால் சில விண்டு போயிருக் கின்றன. மீண்டும் மீண்டும் நான் படைப்பில் இறங்க இந்தத் திருப்தியின்மையும் கதை என்னும் வியப்பூட்டும் நேர்வுக்குக் காக எப்போதும் என் மனத்தில் ஒரு கதவு திறந்திருப்பதும் காரணங்களாக இருக்கலாம்.
ஆகவே என் கதைகள் இன்னும் எழுதி முடிக்கப்பட வில்லை. இத்தொகுப்பின் வாலைப் பிடித்தபடி இன்னொரு தொகுப்பு விரைவிலேயே வரும். பிறகு அதன் வாலைப் பிடித்துக்கொண்டு இன்னொன்று.
தொடர்ந்து கதைகள் வந்தபடி இருக்கும் என்று தெரிந்தும் தளராமல் இந்தத் தொகுப்பை வெளியிட முன்வந்த காலச்சுவடு பதிப்பகத்துக்கும் கண்ணனுக்கும் பதிப்பகத்தில் இந்தத் தொகுப்புக்குப் பொறுப்பேற்ற எஸ்.வி. ஷாலினிக்கும் சுபாவுக்கும் என் நன்றி.

உங்கள் கருத்துக்களை பகிர :
அம்பை :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :