ஒரு எழுத்தாளரின் அமெரிக்கப் பயண அனுபவங்கள்

ஆசிரியர்: பொன். அருணாசலம்

Category பயணக்கட்டுரைகள்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaper back
Pages 288
Weight50 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866





கல்லூரியில் படிக்கும்போது இவரது பெயர் அருணாசலம், ஓர் இலக்கிய ரசிகர். கல்லூரி நாடகங்களில் நடித்திருக்கிறார். இவரது தந்தையார் பெயர் பொன்னுசாமி. தாயார் பெயர் சண்முகவடிவு. கதைகள் எழுதத் துவங்கிய போது தந்தையின் பெயரிலிருந்த 'பொன்'னைப் பெயருக்கு முன்னால் இணைத்துக் கொண்டு பொன். அருணாசலம் என்று எழுதத் துவங்கியவர். வேலூரில் பணியாற்றியபோது, இவரது முதல் சிறுகதை வேலூர் மாலைமுரசில் பிரசுரமாயிற்று.
கதை வெளிவந்த ஆண்டு 1973. உங்கள் சிறுகதைகளின் வர்ணனையும், நீரோட்டமான நடையும் தினமணிக்கதிருக்குப் பொருத்தமானதாகயிருக்கும் என்று தினமணிக்கதிரில் எழுத ஊக்கம் கொடுத்தவர் மாலைமுரசின் அன்றைய ஆசிரியர்.
அவர் சொன்னதுபோலவே தினமணிக்கதரில் மாத்திரம் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மாதவெளியீடு நாவல். சினிமா பேட்டி, கட்டுரைகள்... என்று எழுதியுள்ள இவரது படைப்புகள் பின்னர் குங்குமம், தேவி, சினிமா எக்ஸ்பிரஸ் ஆனந்தவிகடன், குமுதம், தாய், ராணி, இதயம் பேசுகிறது. வானொலி கதை மன்றம், மாலைமதி நாவல்... என்று தமிழகத்தின் பிரபலமான வார ஏடுகள் அனைத்திலும் வெளிவந்துள்ளன.
'தேவி' வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வென்றிருக்கிறார் இவர். சென்னை மணிமேகலைப் பிரசுரம் இவரது படைப்புகள் அனைத்தையும் இது வரை (20க்கும் மேற்பட்ட நூல்கள்) வெளியிட்டுள்ளது.
இவர் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, திருமணம் செய்தது எல்லாமே தூத்துக்குடியில்தான். கூட்டுறவுத் துறையில் பணியாற்றி துணைப்பதிப்பாளராகப் பதவி ஓய்வு பெற்ற இவருக்கு மூன்று பிள்ளைகள்.




உங்கள் கருத்துக்களை பகிர :
பயணக்கட்டுரைகள் :

மணிமேகலைப் பிரசுரம் :