ஒராண்காணி

ஆசிரியர்: சோலை சுந்தரபெருமாள்

Category சிறுகதைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 167
ISBN81-234-0685-1
Weight150 grams
₹45.00 ₹42.75    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மனம் இறுக்கமாக இருக்கும்போது ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டால் பத்து நிமிடங்களில் இறுக்கம் குறைந்து ஒரு நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டிருக்கும். கதைப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினால் அந்தக் கதையின் போக்கு மனதை வருடிக் கொண்டு ஒரு முனையை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும். வரிக்கு வரி ஒரு ஈர்ப்பு சக்தியை ஏற்படுத்தும். அத்தகு தன்மைகள் கொண்ட சிறுகதைகள் தான் ஓராண்காணி என்ற இந்நூலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள். சோலை சுந்தரபெருமாள் சில இடங்களில் மயிலிறகு கொண்டு வருடிக் கொடுக்கிறார். சில இடங்களில் ஊசி கொண்டு குத்துவதைப்போல் குத்திக்காட்டி கருத்துக்களை எடுத்து வைக்கிறார்.
இந்நூலில் பதிமூன்று சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பதிமூன்று கதைகளும் பல்வேறு கோணங்களில் படிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. புகழ் பெற்ற எழுத்தாளர் தி.க.சி அவர்கள் கதைகளைப் பார்வையிட்டு ஒரு கருத்துருவை நம் கண் முன் நிறுத்தியிருப்பது நூலுக்கும் நூலாசிரியருக்கும் பெருமை தருவதாகும்.
வாசகர்கள் இக்கதைகளைப் படித்துச் சுவை காண்பார்கள் என்று பெரிதும் நம்பி இந்நூலை எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சோலை சுந்தரபெருமாள் :

சிறுகதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :