ஒப்பிலக்கிய நோக்கில் தமிழ் மலையாள நாவல்கள்

ஆசிரியர்: டாக்டர் ச.சீனிவாசன்

Category ஆய்வு நூல்கள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 208
ISBN978-81-90881-72-2
Weight250 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழில் நாவல் இலக்கியம் தோன்றியது ஏதோ ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல; அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆங்கிலேயர் வருகையினால் ஏற்பட்ட இயல்பான் இலக்கிய வளர்ச்சியல்ல. ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக்கு விசுவாசிகளாக இந்தியர்களை உருமாற்றம் செய்வதற்காகப் புகுத்திய கல்வி முறையின் உடனிகழ்வாகத் தமிழில் நாவல் தோன்றியது. இதன் மூலமாக இந்தியர்களின் வாசிப்பு, ரசனை முதலியவற்றை ஆங்கிலேயர்கள் புதிய அச்சில் வார்த்து எடுக்க முயற்சி செய்தனர். இந்த முயற்சி ஒரு முகாமில் பிரமிக்கத்தக்க வெற்றி பெற்றது அதற்கு இன்று வரை தமிழில் வெளிவந்து கொண்டிருக்கிற நாவல்கள் சான்று நாவல் வாசிக்கும் வாசகர் கூட்டமும் அதற்குச் சான்று.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழ்த்தப் பெற்ற இந்த புதிய ரசனைத் திணிப்புக்கு சுதேசிச் சிந்தனையாளர்களிடம் எதிர்ப்பு இருந்தது. இதனை 'நாவல்களும் பண்பாட்டு மோதலும்' என்ற விரிவான இயலில் சீனிவாசன் கூறுகிறார். கல்வி, மொழித் தளத்தில் பண்பாட்டு மோதல் என்ற இயல் இவ்வகையில் மிக முக்கியமானது. இதே முறையில் பொருளாதார, சமய நிலைகளில் ஏற்பட்ட மோதலையும் திரு. சீனிவாசன் சுட்டிக் காட்டுகிறார். இதற்காக அவர் மேற்கொண்டிருக்கும் உழைப்பு பிரமிப்பை ஏற்படுத்துவதாகும். சமூகவியல், வரலாறு, பண்பாட்டு வரலாறு முதலான பல துறைகளை ஆழ்ந்து கற்று மிக விரிவான மேற்கோள்களை எடுத்தாண்டிருக்கிறார். நாவல் பற்றிய ஆய்வு என்பது ஏதோ போகிற போக்கில் கதை நிகழ்வுகளை மனப்பதிவு முறையில் விளக்குவதுதான் என்ற எண்ணத்தைத் தகர்த்தெரியும் முறையில் பல்துறைச் சான்றுகளை நுட்பமாக இந்நூலில் எடுத்துக்காட்டியுள்ள திரு ச.சீனிவாசன் பாரட்டுக்குரியவர்.

- ம.திருமலை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆய்வு நூல்கள் :

மீனாட்சி புத்தக நிலையம் :