ஒத்துழைத்துச் செல்வோம் வாருங்கள்

ஆசிரியர்: பி.வி.பட்டாபிராம்

Category சுயமுன்னேற்றம்
Publication கோரல்
FormatPaper back
Pages N/A
Weight150 grams
₹135.00 ₹126.90    You Save ₹8
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சீன மூங்கில் மரத்துக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இது சைனீஸ் வேம்பு என்றும் அழைக்கப்படும். இம்மரத்தின் வளர்ச்சி பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது. இந்த மரம் முதல் ஐந்து வருடங்கள் வரை பெரிய அளவில் வளராது. இது வளரவே இல்லை என பிடுங்கி எறிந்துவிடுபவர்களும் உண்டு. ஆனால் இந்த தாவரம் ஐந்து வருடங்களுக்கு பிறகு 6 மாதங்களில் 80 அடி உயரம் வரை வளரும். இதுபோலவே, மனிதனிடம் தன்னடத்தை, மனபான்மை, சிந்தனைப் போன்ற விஷயங்களில் சிறுவயதில் எப்படி இருந்தாலும் இளம் பருவத்தில் நுழையும் போது சுற்றுப்புரத்தின் தாக்கம், புத்தக வாசிப்பு, பெரியோர்களுடனான அறிமுகங்கள் தன்னுடைய ஆளுமையை மிகவும் ஆச்சரியகரமானதாக மாற்றிவிடும். எதிர்மறை மனிதன் நேர்மறை மனிதனாகவும், நேர்மறை மனிதன் எதிர்மறை மனிதனாகவும் மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஒத்துழைப்பு என்பது சிலரால் மட்டுமே முடிந்த காரியம் அல்ல. அது எல்லோருக்கும் சாத்தியமே. இந்த பக்குவத்தை அடைவதற்கு மனதளவில் தயாராக வேண்டும். தன்னலம் அகங்காரத்தை உடனே விட்டொழிக்க வேண்டும்… ஒத்துழைத்துச் செல்வோம் வாருங்கள் மனைவி மீதோ, கணவன் மீதோ கோபம் வந்தால் பேசுவதை நிறுத்திவிடாதீர்கள் • அலுவலகத்தில் முதலாளியின் (Boss) மீது கோபம் வந்தால் வேலையை விட்டுவிடாதீர்கள் • பெற்றோர்களின் மீது கோபம் வந்தால் வீட்டை விட்டு வெளியேறிவிடாதீர்கள் • பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள் மீது கோபம் வந்தால் படிப்பை நிறுத்திவிடாதீர்கள் • சமுதாயத்தின் மீது கோபம் வந்தால் கதவுகளை அடைத்துக்கொண்டு இருளில் இருந்துவிடாதீர்கள்,
• வாழ்க்கையில் அவ்வப்போது எவரோ ஒருவருடன் மோதல் ஏற்படுவது இயல்பு ஆனாலும் வாழ்ந்து காட்ட வேண்டும். வாழ்க்கையை பொருளுள்ளதாக மாற்றிக்காட்ட வேண்டும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
பி.வி.பட்டாபிராம் :

சுயமுன்னேற்றம் :

கோரல் :