ஐயம் அகற்று
ஆசிரியர்:
கவிஞர் கண்ணதாசன்
விலை ரூ.45
https://marinabooks.com/detailed/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81?id=1054-6187-4794-7117
{1054-6187-4794-7117 [{புத்தகம் பற்றி ஒருவர் ஆசிரியராக இருந்து கொண்டே அந்த இதழினைத் திறம்பட நடத்துவது என்பது சர்வசாதாரண காரியம் அல்ல. வாசகர்களின் மெய் - உணர்வை அறிந்து கொண்டு எழுதுவது, அதனோடு தங்களது லட்சிய உணர்வை அதில் பதிப்பது ஆகிய இரண்டும் அந்தந்தத் துறைகளைச் சார்ந்தவர்கள் மட்டுமே அறிந்த ரகசியமாகும். அதுவும் வாசகர்களின் கேள்வி - பதில் பகுதியைத் தொடங்கி விட்டால் போதும் அதன் ஆசிரியர் திண்டாடிப் போவார். கவியரசரைப் பொறுத்தவரை வாசகர்களால் எத்தனை புத்திக்கூர்மையோடு சாதுர்யமாகக் கேள்விகள் கேட்டாலும் தமக்குள்ள தமிழறிவின் வீச்சை அவர் பதிலாக வடித்திருப்பதை இந்த இனிய தொகுப்பில் காணப்படும் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் நுகரலாம். 1954 ஆம் ஆண்டு துவக்கிய தென்றல் இதழில் துவக்கத்தில் கேள்விப்பெட்டி' என்னும் பகுதியைத்துவக்கி வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அது 'இலக்கிய யுத்தம்' என்னும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866