ஐயப்பப் பணிக்கரின் ஆளுமையும் சில படைப்பு மாதிரிகளும்
ஆசிரியர்:
நீல பத்மநாபன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1254-6822-8196-4400
{1254-6822-8196-4400 [{புத்தகம் பற்றி
<br/>"கவிதை தெரிவதற்குள்ள வழி தெரிந்தவைகளின் வெளியீடல்ல. இன்னும் தெரிய வேண்டுமெனில் இன்னும் எழுதிக்கொண்டே இருப்போம்."இவ்வாறு தன்னைத் தானே புதுப்பித்துக்கொண்டிருந்த ஐயப்பப் பணிக்கர் கவிஞர்களின் கவிஞர், உலக இலக்கியத்தில் ஆழ்ந்த ஞானமுள்ள ஆய்வாளர், கடைசிவரை இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்துக்கொண்டிருந்த நல்ல ஆசிரியர். அரிய திறமைகள் பல பெற்றிருந்தும் தன்னை . ஒரு அறிஞனாகவோ, கலைஞனாகவோ ஒருபோதும் காட்டிக்கொண்டதில்லை. எளிமைதான் அவர் குணாதிசயம். ஐயப்பப் பணிக்கரின் ஆளுமையையும், அவர் படைப்பு மாதிரிகள் (கவிதைகள், கட்டுரை) சிலவற்றையும் இந்நூலில் தந்திருப்பவர் நீல பத்மநாபன்.நீல பத்மநாபன், 1938 ஏப்ரல் 4ஆம் தேதி திருவனந்தபுரத்தில் பிறந்தார். இதுவரை - இவருடைய 3 கவிதைத் தொகுதிகள், 6 கட்டுரைத் தொகுதிகள், 10க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதி உள்ளிட்ட 34 நூல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் 1200 பக்கங்களைக் கொண்ட 'நீல பத்மநாபன் படைப்புலகம்' என்ற கொண்ட புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. 1974 ஆண்டு உறவுகள்' என்ற நாவலுக்கு 'ராஜா சர் அண்ணாமலை செட்டியார்' பரிசும் 1987ஆம் ஆண்டு 'தேரோடும் வீதி' என்ற நாவலுக்கு தமிழ்நாடு அரசு பரிசும் இவருக்குக் கிடைத்துள்ளன}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866