ஐந்திணை எழுபது

ஆசிரியர்: பதிப்பகக் குழு

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 128
Weight100 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மனித உணர்வுகளை நுட்பமாகப் புரிந்து கொண்டு, அந்த உணர்வுகளின் போக்கையும், அவற்றால் அமையும் அகவாழ்வு புறவாழ்வுகளையும் தெளிவாக வகுத்துக் காட்டியிருப்பவர்கள், பழந்தமிழ் நாட்டுப் பாவலர்களும், அறிஞர்களுமே ஆவர்.
பருவத்தின் எழுச்சியோடு இணைந்து நிலத்தின் தன்மைகளும், காலத்தின் தன்மைகளும் எவ்வாறு எல்லாம் மக்களின் வாழ்வை உருவாக்குகின்றன என்பதையும், அவர்கள் இலக்கியச் சுவையோடு சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
இது தமிழ் மொழிக்கே உரிய ஒரு தனிச்சிறப்பாகவும், அறிஞர் உலகத்தால் வியந்து போற்றப்பெறுகின்றது.
இவ்வகையில், குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்னும் ஐந்திணை ஒழுக்கங்களிலும், காதலர்களின் உணர்வுகளும், செயல்களும், பேச்சுக்களும் எவ்வாறு எல்லாம் அமைந்து விளங்கின என்பதனைச் சுவையாகவும், நுட்பமாகவும் விளக்குவது, மூவாதியரின் ஐந்திணை எழுபது என்னும் நூல் ஆகும்.
அந்த நூலின் செய்யுட்களைத் தழுவிக் காதலர்களின் வாழ்வுப்போக்கை அனைவருக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லுவதற்கு முயன்றிருக்கின்றேன். அந்தக்கால வாழ்வுச் செழுமையை அறிந்து போற்றவும் இது உதவும்.
தமிழன்பர்கள் இந்த இனிய நல்லதமிழ் விருந்தினை விரும்பி வரவேற்பார்கள் என்று நம்புகின்றேன். அன்னை பராசக்தியின் அருளையும் நினைந்து வணங்கிப் போற்றி இதனைத் தமிழ் உலகுக்கு வழங்கி மகிழ்கின்றேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பதிப்பகக் குழு :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :