ஏழாம் சுவை

ஆசிரியர்: கு.சிவராமன்

Category சமூகம்
FormatPaperback
Pages 104
ISBN978-81-8476-499-4
Weight150 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமருத்துவர் கு. சிவராமன்தான் என்னுடைய சித்த மருத்துவ ஆலோசகர். நல்ல காலம் எனக்கு மருத்துவம் தெரியாது. நல்ல வேளை அவருக்கு எழுத்தின் நாடியையும் பிடிக்கத் தெரிந்திருக்கிறது. சித்த மருத்துவம்தான் சொல்கிறார். ஆனால் அதை மட்டும் அல்ல, கூகுள் தலைமுறை, கூட்டணி அரசியல், அலைக்கற்றை ஒதுக்கீடு, 'நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய்...' பாடல், இத்தாலிய பீட்சா, ஐஸ்பெட்டியில் காத்திருக்கும் பாட்டிக்காக அவசரமாகக் கிளம்பிவரும் அட்லாண்டா மாமா, வணிக ஆளுமையால் வளரும் நாடுகளில் ஆயுதமாகிவரும் உணவு, மூங்தால் முக்காபுலா, ப்ரீபெய்ட் புன்னகை எல்லாம் வருகின்றன. மறு நுனியில், டபுள்ஸ் வைக்கத் தெரியாத அப்பா, பம்பரக் கயிறு மாதிரி நீளமாக வரும் பாம்பு முறுக்கு, முந்திரிக் கொத்து, கால்படி சந்தோஷம், அரைப்படி சிரிப்பு, கூடுதல் கரிசனம், குதூகல மனம், மழைக்கால உணவு, தட்டுக்கு வருமுன் ஒரு பருக்கை செய்கிற பயணம் எல்லாம் சொல்லப்படுகிறது. இதற்கு இடையில், அவர் வாதம், பித்தம், கபம் பற்றிச் சொல்வதை அப்படியே மனதில் வாங்கிக்கொள்கிறோம். தொந்தரவு இல்லாமல் செரிமானம் ஆகிவிடுகிறது. சித்தம் ஆதி, சித்தம் ஞானம், சித்தம் மருத்துவம். ஆறாம் திணை ஆயிற்று. ஏழாம் சுவை ஆயிற்று. அடுத்து என்ன... எட்டாம் நிறமா? ராமசுப்புவின் சைக்கிளில் குரங்கு பெடல் போட்டு, கிணற்றாங்கரை வரை போய், மத்தியான வெயிலில் மழைத்தூறலுக்கு இடையில் அவர் பார்த்த வானவில்லுக்கு, நிச்சயம் ஏழு அல்ல, எட்டு நிறங்கள் இருந்திருக்குமே!

உங்கள் கருத்துக்களை பகிர :
கு.சிவராமன் :

சமூகம் :

விகடன் பிரசுரம் :