ஏற்றுமதியில் சந்தேகங்களா? (பாகம் 2)

ஆசிரியர்: சேதுராமன் சாத்தப்பன்

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 128
ISBN978-81-8446-531-9
Weight200 grams
₹95.00 ₹80.75    You Save ₹14
(15% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஏற்றுமதி என்பது லாபகரமான தொழில் என்பது பலருக்குத் தெரிந்திருக்கும். தரமான பொருட்கள் தயாரிக்கும் பலர் தமிழகத்தில் இருந்தாலும் அவர்கள் ஏற்றுமதியில் ஈடுபட விரும்புவதில்லை. காரணம் ஏற்றுமதிக்கு நல்ல ஆங்கிலப் புலமை வேண்டும் என்பது போன்ற எண்ணம் இருப்பதுதான். ஏற்றுமதி செய்ய ஆங்கில அறிவு தேவையில்லை. தரமான பொருட்கள்தான் தேவை என்பதைக் கூறும் வகையில் தினமலர் நாளிதழில் ஒரு தொடர் எழுத வேண்டிக் கேட்டிருந்தபொழுது அவர்கள் 20 வாரங்கள் எழுதுங்கள் என்றார்கள். அது சிறப்பான முறையில் வெளிவந்து சுமார் 50 வாரங்கள் வரை நீண்டு சென்றது. பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து சுமார் 100 வாரங்களுக்கு மேல் ஏற்றுமதி சம்பந்தப்பட்ட கேள்வி களுக்கு தினமலர் மூலம் பதிலளித்தேன். அந்த கேள்வி - பதில்களின் இரண்டாவது தொகுப்பு புத்தக வடிவமாக உங்கள் கையில்.
ஏற்றுமதி குறித்து பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் வந்துள்ளன. ஆனால் தமிழில் அவ்வளவாக வரவில்லை . அதைப் போக்கும் விதமாகவும், ஏற்றுமதியில் லாபம் கம்பிமேல் நடப்பது போன்றது என்பதால் தவறில்லாத ஏற்றுமதி மிகவும் முக்கியமானதாகும், அதை எவ்வாறு செய்வது என்று உங்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறவே இந்தப் புத்தகம் உங்கள் கையில் உள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சேதுராமன் சாத்தப்பன் :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :