ஏற்றம் தரும் மாற்றம்

ஆசிரியர்: வீ.அரிதாசன்

Category வணிகம்
Publication புதிய தலைமுறை
FormatPaperback
Pages 160
First EditionJul 2013
3rd EditionSep 2015
ISBN978-93-83986-06-4
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$7.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

அனைத்து மூலப்பொருட்களும் நிறைந்து விளங்கும் நமது நாட்டில் மதிப்புக்கூட்டி வணிகம் செய்வதின் மகத்துவத்தை உணராதவர்களாக இன்றும் இருந்து வருகிறோம். யாரெல்லாம் பொருட்களை மதிப்புக்கூட்டி நம் நாட்டில் வணிகம் செய்து வருகிறார்களோ அவர்களின் பொருளாதார வளர்ச்சியை கண்கூடாக தொடர்ந்து பார்த்து வருகிறோம். மதிப்புக்கூட்டுவதால் தமிழர்களின் வாழ்வு பொருளாதார ரீதியில் நிச்சயம் ஏற்றம் பெறும் என நம்பிக்கையுடன் தமிழகத்தில் எளிய முறையில் மதிப்புக்கூட்டுதல் தொழில் மூலம் வெற்றி பெற்ற பலரது அனுபவங்களை “ஏற்றம் தரும் மாற்றம்” என்ற தலைப்பில் புதிய தலைமுறை வார இதழில் தொடராக எழுதினேன். இந்த நூல் தமிழர்களின் வாழ்வை வளம் மிக்கதாக மாற்ற உதவும். புதிய புதிய மதிப்புக்கூட்டுதல் யுக்திகளின் மூலம் வாழ்வில் உயர்ந்த பல எளிய மனிதர்களின் பட்டறிவுப் பாடங்களை படிக்கப் படிக்க அனைவரது சிந்தனைகளிலும் புதிய மறுமலர்ச்சி உருவாகும், வெளியில் தெரியாத வேர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் பலரது வாழ்க்கைப்பாடங்களையும், பட்டறிவு அனுபவங்களையும் இந்நூலின் எல்லாப் பக்கங்களிலும் காணமுடியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :