ஏமாற்றாதே ஏமாறாதே

ஆசிரியர்: சுகி சிவம்

Category சுயமுன்னேற்றம்
Pages 128
ISBN978-81-8345-051-2
Weight100 grams
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசரியான பாதையில் மக்களை இட்டுச் செல்லும் சர்வசக்தி மிக்கதே சமயம். அதற்கு சமயம் சரியான பாதையில் செல்ல வேண்டும். சமயம் சரியான பாதையில் செல்லவில்லை என்றால் சாமான்ய மனிதர்கள் நிலை என்ன ஆகும்? உண்மையில் சமயத்தை வழிநடத்த வேண்டிய நிஜமான பொறுப்பு ஞானிகளுக்கும் மகான்களுக்கும் சான்றோருக்கும் உரியது.ஆனால் சராசரி சாமியார்கள் மற்றும் பொறுப்பு குறைந்த சிற்றறிவுமிக்க ஜோதிடர் சிலர் கையில் இன்று சமயம் கைநழுவிப் போய்விட்டது. பக்திப் பண்ணைகளாக, பண்பாட்டு விளைநிலங்m களாக இருந்த ஆலயங்கள் வெறும் பரிகாரத்தலங்களாக, பக்தி வியாபாரிகளின் சந்தைக் கூடமாக ஆகிப் போனது. பல கோயில்கள் வெறும் சுற்றுலாப் பொருட்காட்சிகள் போல விளம்பர வெளிச்சத்துடன் மட்டுமே உள்ளன.சமயச் சொற்பொழிவாளர்களும் வாய்ப்புக்காகவும், வசதிக்காகவும், ஜாதி அபிமானத்திற்காகவும், சில்லறை லாபங்களுக்காகவும் உண்மைகளைச் சொல்லும் உரமற்றவர்களாகிப் போனார்கள். சத்திய ஜோதியைச் சுமக்கும் திருவண்ணா மலையாக இருக்க வேண்டியவர்கள் பெட்டிக்கடைகளில் சிகரெட் பிடிக்க எரியும் சிறு நெருப்பாகத் தரம் குறைந்து போனார்கள். இது துயரம் தருவது.மக்களின் சுயநலம், மூடநம்பிக்கை அர்த்தமற்ற பயம் இவை சமய வியாபாரிகளின் மூலதனங்களாயின. மக்களை அறியாமையி லிருந்து அறிவுக்குப் பதவி உயர்த்தும் உண்மையான சமயம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

சுயமுன்னேற்றம் :

கவிதா பதிப்பகம் :