எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category சிறுகதைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatHard Bound
Pages 534
ISBN978-93-85104-00-8
Weight750 grams
₹510.00 ₹484.50    You Save ₹25
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கதை என்றால் என்ன, கேள்வி மிக எளிமையாகயிருக்கிறது. ஆனால் இதற்கான முடிவான பதிலாக எதுவுமில்லை. ஒவ்வொரு தேசமும் கதை பற்றி ஒருவித எண்ணத்தைக் கொண்டிருக்கின்றன. கதை என்பது கற்பனையும் அனுபவமும் ஒன்று கலந்து உருவாக்கப்படும் புனைவு என்பதை எல்லாக் கதைமரபுகளும் ஒத்துக்கொள்கின்றன.
கதை சொல்பவன் யார், யாருடைய கதையை யாருக்குச் சொல்கிறான், எப்படிச் சொல்கிறான், எதைக் கவனப்படுத்துகிறான் என்பதில் தனித்துவமான பாணியைக் கொண்டிருக்கிறார்கள் வெற்றிகரமான சிறுகதையாசிரியர்கள். அதனால்தான் ஒரு சிறுகதையை வாசிக்கத் துவங்கியதும் இது புதுமைபித்தன் பாணி, இது மௌனியின் பாணி, இது தஸ்தாயெவ்ஸ்கியின் பாணி என நம்மால் எளிதாக அடையாளம் கண்டுவிட முடிகிறது.
இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற இலக்கணமெல்லாம் சிறுகதைக்கு இல்லை. வாழ்வனுபவங்களும் கற்பனையும் வேறுவேறு வகைகளில் ஒன்று கலந்தே சிறுகதைகள் உருவாகின்றன.
கவிஞர்கள் சொற்களைக் கவனமாகத் தேர்வு செய்வது போலவே சிறுகதையாசிரியன் வாக்கியங்களைக் கவனமாக உருவாக்குகிறான். சரியான ஒரு துவக்க வாக்கியம் அமையப்பெற்றால் போதும், கதை தானே ஈர்ப்பு கொள்ளத் துவங்கிவிடும்.
இன்றைய சிறுகதைகள் நவீன காலகட்டத்தைத் தாண்டியவை. பல்வேறுபட்ட கதைக்களங்கள், கதையாடல்கள், குறியீடுகள், கற்பனை கள் யாவும் ஒன்று சேர்ந்தவை. இந்தப் பன்முகத்தன்மையே இன்று சிறுகதை எழுதுவதை ஒரு சவாலாக்கியுள்ளது.
நம்மால் அறியப்படாத கதைவெளி இன்னும் நிறையவே இருக்கிறது. தொடப்படாத அந்தக் கதைவெளியை அடையாளம் காண்பதும் அவற்றிலிருந்து புதிய புனைவை மேற்கொள்வதையுமே எனது பிரதான எழுத்துப்பணியாகக் கருதுகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

சிறுகதைகள் :

உயிர்மை பதிப்பகம் :