எல்லோரும் வாழ்வோம்

ஆசிரியர்: நெ.து.சுந்தரவடிவேலு

Category பொது நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹70.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எதிர்காலம், தம்பி, தங்கைகளுடையது. காலம் விரைவாக மாறி வருகிறது. நிலாவை அழைத்து அழைத்து, ஏமாந்த மக்கள், துணிந்து நிலாவில் இறங்கியதைக் கண்டோம். எனவே எதிர்காலம், புதுமைக் காலம் மட்டுமன்று; எல்லோரையும் அடுத்த வீட்டுக்காரராக்கும் காலம். அத்தகைய காலத்திற்கேற்ற கருத்தோடு, தம்பி தங்கைகள் வளர வேண்டும். அதற்குச் சீரான சிந்தனை தேவை. இந்நூலில் உள்ள கட்டுரைகள் அத்தகைய சிந்தனையைத் தூண்டும் நோக்கத்தோடு எழுதப்பட்டவை. 'எல்லோரும் வாழ்வோம்' என்னும் தலைப்பில் தொடர்கட்டுரைகள் எழுதத் தூண்டிய, 'உலகம்' ஆசிரியர், காஞ்சி அமிழ்தனுக்கு நன்றி. அவரது நச்சரிப்பு இல்லையேல் இவை எழுத்தில் உருப்பெற்றிரா.
இக் கட்டுரைகளைத் தொகுத்து, நூலாக வெளியிட முன்வந்துள்ள, என்.சி.பி.எச்.நிறுவனத்திற்கு என் நன்றி உரியது.என் பிற நூல்களை ஆதரித்து வரவேற்ற தமிழ் மக்கள் இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். நோக்கிலே சமதை, உழைப்பிலே உயர்வு, நேர்மையின் உறுதி ஆகியவை கிளைத்துத் தழைக்க இந்நூல் துணைபுரியும் என்று நம்புகிறேன்.

-நெ.து.சுந்தரவடிவேலு.

உங்கள் கருத்துக்களை பகிர :
நெ.து.சுந்தரவடிவேலு :

பொது நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :