எம் ஜி ஆர்

ஆசிரியர்: வழக்கறிஞர் குமார் ராஜேந்திரன்

Category வாழ்க்கை வரலாறு
Publication மெரினா புக்ஸ்
FormatHard Bound
Pages 800
Weight1.97 kgs
₹1800.00 ₹1620.00    You Save ₹180
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வணக்கம்!
மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல், வாத்தியார் என்று மக்களிடமும், தொண்டர்களிடமும் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களுக்குத் தான்
எத்தனை பட்டங்கள்? நீடிக்கும் எத்தகைய பாசங்கள்?
"சேச்சா" என்று என்னுடைய இளம் வயதில் அவரை அழைத்துப் பழகிய தருணங்கள் இன்னும் நினைவில் பசுமையாய்ப் பதிந்திருக்கின்றன.
உறவினர்களின் மனதில் இரட்டை இலையைப் போலக் கலந்திருக்கிறார்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், "தோட்டத்தம்மா" என்று நாங்கள் அன்புடன் அழைக்கும் திருமதி ஜானகி அம்மாளும். ஒரு நூற்றாண்டு கடந்தும் மக்களின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் புரட்சித்தலைவர். அதன் தொகுப்பே 'எம்.ஜி.ஆர்' என்கிற இந்த நூல். ஜானகி அம்மா உள்ளிட்ட பலருடைய பதிவுகள் இதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சாத்தியமாக்க என்னுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் எனது அன்பான நன்றி. எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்து மந்திரச்சொல் எங்களுடனும், அவரை நேசிக்கும் ரசிகர்களுடனும், தொண்டர்களிடமும் என்றும் உடனிருக்கும்.
அன்புடன்
குமார் ராஜேந்திரன்

உங்கள் கருத்துக்களை பகிர :
வழக்கறிஞர் குமார் ராஜேந்திரன் :

வாழ்க்கை வரலாறு :

மெரினா புக்ஸ் :