என் பார்வையில் ஜெர்மனி

ஆசிரியர்: திருவேணி

Category பயணக்கட்டுரைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Format Paperback
Pages 136
ISBN978-93-87597-17-4
Weight200 grams
₹130.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் தமிழ் என்ற எழுத்துக்குப் பொருள் சேர்க்க புலம் பெயர் நாட்டில் ஓர் ஆலயம் சூழ்ந்த இடத்தை, இம்மாநாட்டுக்காகத் தெரிவு செய்துள்ளது. ஜெர்மனியிலே தமிழர் பண்பாட்டு அடையாளம் இராஜ கோபுரத்துடன் கூடிய கம்நகர் காமாட்சி அம்பாள் ஆலயம் அமைந்துள்ள, இடத்தில் இம்மாநாடு நடைபெறுவது சிறப்புக்குரியதாகும். இறை நம்பிக்கையை அடுத்த சமுதாயத்திற்கு ஊட்ட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உரியது. மேலும் மொழியினைப் பாதுகாப்பதற்கு ஆலயம் மிக உயர்ந்த சூழமைவைக் கொடுக்கும் என்பதாலும், எதிர் காலத்தில் சைவம் தமிழிலே இறைவழிபாடு செய்வதற்கான எண்ணங்களை உருவாக்கும் நோக்குடன், ஜெர்மனியின் வட மாநிலமான கம்நகரம் தேர்வு செய்யப்பட்டதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மாநாட்டுச் சென்றிருந்த என்னிடம் எடுத்து இயம்பினார்கள்.
உலகில் உள்ள 169 நாடுகளில் வாழுகின்ற தமிழருடைய பண்பாடு காக்கப்பட வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக உள்ள அமைப்பு இதுவாகும். கடந்த 40 ஆண்டுகளாகப் பல நாடுகளில் கிளைகள் அமைத்து, மத்திய, மாநில, மாகாண அரசாங்கங்களில் முறைப்படி பதிவு செய்து தமிழர்களின் பண்பாடுகள் அழியாமல் காத்து வளரச் செய்வதே இதன் தலையாய குறிக் கோளாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
திருவேணி :

பயணக்கட்டுரைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :