என்றும் இளமை

ஆசிரியர்: ஆசனா இரா.ஆண்டியப்பன்

Category யோகாசனம்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaper Back
Pages 104
Weight100 grams
₹45.00 ₹42.75    You Save ₹2
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒவ்வொரு மனிதனும் தன் ஜீவியத்தில் ஆரோக்கியமாக வாழ்ந்து அதன் பயனாக இன்பமும் இன்பத்தின் பலனாக துணிவும் கொண்டு நூறாண்டு வாழ்ந்து வந்திருக்கிறான் என்று வேதங்கள் கூறுகின்றன. மண் தோன்றிய கால முதல் மனிதன் தன் மனோபலத்தால், தேகபலத்தால் யௌவனமடைந்து நீடூழி வாழ முடியும் என்று அனுபவ ரீதியில் கண்டறிந்திருக்கிறான். ஒரு வியாதிக்கு ஒரு மருந்து எல்லோரையும் குணப்படுத்த உதவுவதில்லை. ஒருவனுக்கு ஒரு மருந்து நன்மையளிக்கின்றது. இன்னொருவனுக்கு அதே மருந்து தீமை பயக்கிறது. இவை வைத்திய சாஸ்திரம் கண்ட உண்மை. எனவே நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை இதில் விவரிக்கப்படும் குறிப்புகள், முறைகள். உயர்ந்த நோக்கங்கள் வாழ்க்கையின் அடிப்படையான மனோபாவம். பிறப்பு, இறப்பு, உலகம் சுழல்கின்ற விதம் இவை ஒவ்வொருவருடைய தத்துவத்தையும் மாற்றி விடுகின்றன என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன. மனிதன் ஏன் கடவுளால் படைக்கப்பட்டான்? அப்படிப் படைக்கப்பட்ட மனிதனின் வாழ்வின் நோக்கம்?
செய்யும் செயல்களின் பலன் என்ன? அவன் அவற்றால் அடையும் இன்பம் யாது? என்பவைகளை ஆராயுமிடத்து, அவனைப் படைத்த கடவுளும் உலகமும் ஒன்றென உணர்கிறான். தன் வாழ்வில் தன் காலில் தான் நிற்கவும் பிறர் உதவியை நாடாமலும் இருக்க வேண்டின் ஆரோக்கியம் முதலில் தேவை என்பதையறிகிறான். அதுவே அவன் நெடுநாள் வாழ உதவுகிறது. அதுவே வாழ்வின் பயன் என்று காண்கிறான். ஆரோக்கியமற்று, உபயோகமற்று, பிறர்க்கும் சுமையாக, பூமிக்கு பாரமாக தன்னிலையற்று நெடுநாள் வாழ்வதால், வீட்டினுள் அடங்கிக்கிடப்பதில் என்ன பயனடைகிறான்? வாழ்க்கை வாழ்வதற்கே.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசனா இரா.ஆண்டியப்பன் :

யோகாசனம் :

பாரதி பதிப்பகம் :