என்னுயிரும் நீயல்லவோ

ஆசிரியர்: பாலகுமாரன்

Category கட்டுரைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
Pages 384
First EditionJun 2020
3rd EditionJan 18
Weight450 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 3 cms
₹250.00 $10.75    You Save ₹12
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அன்புள்ள பாலகுமாரன் சார் அவர்களுக்கு,
நான் நகை வியாபாரி. பழைய நகைகள் வாங்கி, புதிய நகைகள் விற்று என்று பல்வேறு விதமாய் காசு சம்பாதிக்கின்ற கமிஷன் ஏஜெண்ட். எதனாலோ இப்படித்தான் வயிற்றுப் பிழைப்பு இருக்கிறது. இந்த தங்கம் வாங்கி விற்கிற வேலையில் ஏகப்பட்ட நாடகங்கள் பார்க்கிறேன். தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை நகையை தங்க நகை என்று நினைத்துக் கொண்டிருந்த வீடு. வீட்டில் உள்ள ஏழு பெண்களும் கட்டுக் கழுத்திகளாக இருந்தும், திருமாங்கல்யங்களை விற்க வேண்டிய நிலைமை. ஒரு வருடம் முன்பு காலை டீக்கு லோல்பட்டவர் இருநூறு கிராம் நகைகள் வாங்கின மகிமை என்னை என்னா வேணா செய்துக்கோ ரெண்டு கிராம் மூக்குத்தி கொடுத்துட்டு போ என்று சொன்ன இளம்பெண், வருடத்திற்கு பத்து கிராம் நகை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு உழைக்கிற குடும்பம், மனைவிக்கு தெரியாமல் நகை விற்ற கணவன், கணவனுக்கு தெரியாமல் நகை விற்ற மனைவி என்று பலதும் பார்த்தாகி விட்டது.
உங்களை அதிகாலை கடற்கரை நடையின் போது பார்த்தது என் பெரிய பாக்கியம். பத்து நிமிடத்தில் நாம் நடையை விட்டு வல்லாரை காபிக்கு உட்கார்ந்து விட்டோம். என்னைப்பற்றி விசாரித்துவிட்டு 'யோவ் நீ நாவல்யா' என்று பெரிதாகவே கத்தினீர்கள். எனக்கு எழுதவேண்டும் என்று நெடுநாள் ஆசை

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

கட்டுரைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :