எனை மாற்றும் காதலே

ஆசிரியர்: சிந்துஜா

Category குடும்ப நாவல்கள்
FormatPaperPack
Pages 232
Weight250 grams
₹249.00 $10.75    You Save ₹12
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஒவ்வொருவரின் வாழ்வில், அன்பும், காதலும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் அனுபவமும் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. ஒருவருக்கு வெற்றியையும், மற்றவருக்கு தோல்வியையும், சிலருக்கு கற்றலையும், சிலருக்கு புரிதலையும், சிலருக்கு மாற்றத்தையும், சிலருக்கு வலியையும் தருகிறது. சுஹாவிற்கு ஏற்படும் அனுபவம், எத்தகையது? வலியா? பிரிவா?' சித்தார்த்தனின் அனுபவம் கற்றலா, புரிதலா, மாற்றமா? இவர்கள் காதல் வெற்றியா, தோல்வியா?"எனை மாற்றும் காதலே" இந்த கதை, காதலை ஒரு புதிய பரிமாணத்தில் சித்தரித்துள்ளது. இயக்குநர் கே. பாக்யராஜ். சிந்துஜா, தகவல் தொழில்நுட்பத்துறையில் கடந்த பதினைந்து வருடங்களாக பணியாற்றி வருகிறார், திறமையானவராகவும் நிர்வாகத்திறன்மிக்கவராகவும், நேர்மையான, நேர்மறையான , எண்ணங்கள் கொண்டவராகவும், வளர்ந்து வரும் பணியாளர்களுக்கு நம்பிக்கைக்குரிய நல்வழிகாட்டியாகவும், விளக்கமளிப்பவராகவும் அறியப்படுகிறார். கணினி பயன்பாட்டியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். பாடலாசிரியர் பட்டமும் பெற்றவர்! தமிழ் மீதான பற்றும், இவரது எழுத்தார்வமும், இவரை எழுத்தாளராக உருவாக்கியது. இவரது கவிதைகள் ( கடவுள் மீதான அன்பு, நன்றி மற்றும் ஆன்மீக அனுபவங்கள் சார்ந்தவை!) "பக்தையின் மடல்கள்" என்ற தலைப்பில், இரண்டு நூல்களாக வெளியிடப்பட்டது. இவரது இன்னும் பிற கவிதைகள், "எண்ணங்களை எதிரொலித்தவள்" என்று நூலாக வெளியிடப்பட்டது. இவரது நூல்கள், பலதரப்பட்ட மக்களால் வாவேற்கப்பட்டு, பாராட்டப்பட்டது! இவரது எழுதும் ஆர்வம் மேம்பட்டு, சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் வடிவம் பெறுகின்றன, "எனை மாற்றும் காதலே' எனும் இந்த நாவலும், அத்தகைய படைப்பே!

இயக்குநர் பல்கலை வேந்தன் கே. பாக்யராஜ் அவர்கள் சிந்துஜா அவர்கள், தகவல் தொழில்நுட்ப துறையில், அதுவும் கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டம் பெற்றவர், ஒரு கதை எழுத முயற்சித்து முடித்திருக்கிறார்! கதை எழுதுவதென்பது, செடியில் பூப்பறிப்பதைப் போன்ற சுலபமான வேலையன்று! தேன்கூட்டிலிருந்து தேனிக்கள் கொட்டிவிடாமல் தேன் எடுக்கும் முயற்சி! அம்முயற்சியில் சிந்துஜா வெற்றி பெற்றுள்ளார்! "எனை மாற்றும் காதலே" என்ற இவரது இந்த கதை, காதலை ஒரு புதிய பரிமாணத்தில் சித்தரித்துள்ளது. பானை சோற்றுக்கு பருக்கை பதம் என்பது போல அன்பும், காதலும் நம் அனைவரின் வாழ்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கதையின் கரு என்கண்வழி புகுந்து சிந்தையில் உறைந்தது. இன்றைய நவீன காலகட்டத்தில் வரும் காதல், முரண்பாடுகள், நட்பு, வாழ்வாதாரம் இவற்றைத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறார். படித்த போது சில இடங்களில் வலித்தது, படைத்தபோது சிந்துஜாவுக்கும் வலித்திருக்கும்! படிப்பவருக்கும் அது வரும்! துறைமாறி, இத்தகைய கதை சொன்ன உங்கள் பேனா, விரைவில் பல கதைகள் படைக்கட்டும்! பெயர், புகழ் வளர்ந்து நிலைக்கட்டும்!

உங்கள் கருத்துக்களை பகிர :
குடும்ப நாவல்கள் :

Notion Press :