எனப்படுவது
ஆசிரியர்:
லதானந்த்
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81?id=1227-0817-9865-5610
{1227-0817-9865-5610 [{புத்தகம் பற்றி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.amp;nbsp;- இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது..}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866