எனது பாரதம் அமர பாரதம்

ஆசிரியர்: சுவாமி விவேகானந்தர்

Category சமூகம்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 296
ISBN978-81-7823-239-1
Weight300 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நாட்டிற்கு ஒரு புதிய இந்தியாவின் காட்சியை அளித்த முன்னோடிகளில் முதல்வராக திகழ்கிறார் சுவாமிஜி சுதந்திரமான, புத்துணர்ச்சி ஊட்டப்பட்ட, புதுமைப் பொலிவு பெற்ற, புராதனப் பெருமை மீட்கப்பட்ட ஓர் இந்தியாவின் காட்சியை அவர் நமக்கு விட்டுச் சென்றுள்ளார். அவர் தமது காட்சியை உணர்ச்சிப் பெருக்குடன் இவ்வாறு விவரிக்கிறார்: 'இதுவரை இல்லாத அளவிற்குப் பெரும் சிறப்புடன் அத்தகைய இந்தியா உருவாகிக் கொண்டிருக்கிறது என்ப தில் சந்தேகமில்லை ..... அவ்வளவுதான். எழுந்திருங்கள், விழித்திருங்கள். அழியாத தன் அரியாசனத்தில் புத்திளமை யோடும் முன்பு எப்போதும் இல்லாத பெருமையோடும் அவள் வீற்றிருப்பதைக் காணுங்கள்.'
இப்படியொரு பரவசக் காட்சியுடன் நின்று விட் டாரா விவேகானந்தர்? அந்தக் காட்சியை உண்மையாக்க என் னென்ன செய்ய வேண்டுமோ அவற்றையும் கூறிச் சென் றுள்ளார். அதுபற்றிய ஒரு கண்ணோட்டமே 'எனது பாரதம் அமர பாரதம்'. வங்க மொழியில் 1986-இல் வெளியாகி, பல மறுபதிப்புகளைக் கண்ட 'ஆமார் பாரத் அமர் பாரத்' என்ற நூலின் மொழிபெயர்ப்பு இது. இந்த நூலைத் தொகுத்தவர் எமது மடத்தின் மூத்தத் துறவியருள் ஒருவரான சுவாமி லோகேஸ்வரானந்தர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுவாமி விவேகானந்தர் :

சமூகம் :

ராமகிருஷ்ண மடம் :