எனது பயணம் (ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தல்)

ஆசிரியர்: ஏ.பி.ஜே அப்துல் கலாம்

Category பயணக்கட்டுரைகள்
Publication மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
FormatPaperback
Pages 168
First EditionJan 2014
5th EditionJan 2017
ISBN978-81-8322-394-2
Weight150 grams
Dimensions (H) 20 x (W) 14 x (D) 2 cms
₹195.00 $8.5    You Save ₹9
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சின்னஞ்சிறு தீவான ராமேஸ்வரத்தில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து நம் நாட்டின் பதினோராவது குடியரசுத் தலைவராக உருவான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையானது, அசாதாரணமான மன உறுதி, அபாரமான தைரியம், அயராத விடாமுயற்சி, செய்கின்ற ஒவ்வொன்றையும் மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற தணியாத தாகம் ஆகியவற்றைப் படிக் கற்களாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாக விளங்குகின்றது. இப்புத்தகத்தில் டாக்டர் கலாம் அவர்கள், தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சிறிய மற்றும் பிரம்மாண்டமான நிகழ்வுகளை ஆசுவாசமாக நின்று திரும்பிப் பார்த்து உணர்ச்சிபூர்வமாக அசை போடுகிறார். அவை ஒவ்வொன்றும் தன் வாழ்க்கையில் எவ்வாறு பெரும் தாக்கத்தை விளைவித்தன என்பதை வாசகர்களோடு அவர் பகிர்ந்து) கொள்கிறார். தான் சிறுவனாக இருந்தபோதும் வாலிபனாக வளர்ந்தபோதும் தனது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களைப் பற்றியும் அவர்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்ட பாடங்களைப் பற்றியும் அவர் இதில் எடுத்துரைக்கிறார். ஆழ்ந்த தெய்வ பக்தியுடன் இருந்த தனது தந்தையார், அன்பே உருவான தனது தாயார், தனது கண்ணோட்டத்தையும் தனது சிந்தனையையும் செதுக்கிய வழிகாட்டிகள் போன்ற, தன்னுடைய வாழ்க்கையில் தனக்கு நெருக்கமாக இருந்த அனைத்து அன்புள்ளங் களையும் அவர் இதில் நன்றியு ணர்வோடு நினைவுகூர்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ.பி.ஜே அப்துல் கலாம் :

பயணக்கட்டுரைகள் :

மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் :